பாலின வன்கொடுமைக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி
பாலின வன்கொடுமைக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர் முன்னிலையில் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
பெரம்பலூர் பாலக்கரை பகுதி அருகே சமூக நலத்துறை சார்பில் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் பங்கு பெற்ற பாலின வன்கொடுமைக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது, பாலக்கரை பெட்ரோல் பங்க் அருகே தொடங்கிய இப்பேரணியை மாவட்ட ஆட்சியர் கற்பகம், சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் முன்னிலையில் கொடி அசைத்து துவக்கி வைத்தார், மதனகோபாலபுரம், வெங்கடேசபுரம், சங்குபேட்டை , கடைவீதி, வழியாக சென்ற பேரணி பழைய பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது, பேரணியில் பெண் குழந்தைகளை பாதுகாப்போம் பெண் கல்வியை ஊக்குவிக்கும் , என்ற விழிப்புணர்வு வாசகம் விழிப்புணர்வு கோஷமிட்டும் பேரணியாக சென்றனர், நிகழ்ச்சியின் முன்பாக பாலின வன்கொடுமைக்கு எதிரானஉறுதிமொழி மாவட்ட ஆட்சியர் கற்பகம் வாசிக்க அதனை தொடர்ந்து அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில், மாவட்ட திட்ட அலுவலர் லலிதா, சமூக நலத்துறை அலுவலர் ரதா, மாவட்டத் துணை காவல் கண்காணிப்பாளர் பழனிச்சாமி உள்ளிட்ட மகளிர் சுய உதவி குழு உறுப்பினர் திரளாக பங்கேற்றனர்.
Next Story