ஜெயங்கொண்டத்தில் சுய உதவி குழுவினர் சார்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம்

ஜெயங்கொண்டத்தில் சுய உதவி குழுவினர் சார்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம்
கருத்தரங்கத்தில் கலந்து கொண்டவர்கள் 
ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் மகளிர் திட்டம் சுய உதவி குழுவினர் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் மகளிர் திட்டம் சுய உதவி குழுவினர் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு கருத்தரங்கம் ஊர்வலம் மற்றும் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிகளுக்கு திட்ட இயக்குனர் லட்சுமணன் (மகளிர் திட்டம்) தலைமை தாங்கி நூறு சதம் வாக்களிப்பதன் அவசியத்தை கூறி வாக்காளர் உறுதிமொழி வாசிக்க அனைவரும் விழிப்புணர்வு உறுதி மொழியை ஏற்றதை தொடர்ந்து. வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம் துவக்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் சந்தானம், உதவி திட்ட இயக்குனர் ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சிகளில் ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அனைத்து ஊராட்சி சுய உதவி குழுவினர் மகளிர் கலந்துகொண்டு ஜெயங்கொண்ட ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் இருந்து அரசு மேல்நிலைப்பள்ளி வழியாக சென்று அண்ணா சிலைக்கு சென்று முடிவடைந்தது. நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய அலுவலக முன்பு வாக்காளர் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோலமிட்டு மகளிர் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

இதில் ஒன்றிய அலுவலக பணியாளர்கள், ஊழியர்கள், மேலாளர் வெங்கடேசன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.முன்னதாக பொது மேலாளர் தாமோதரன் வரவேற்றார். முடிவில் சத்துணவு திட்ட மேலாளர் மனோகரன் நன்றி கூறினார்.

Tags

Next Story