அயோத்தி வழக்கு: பாஜக மாநில தலைவர் நன்றி
அண்ணாமலை
அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவின் சிறப்பு நேரலை காட்சி சென்னை கோபாலபுரம் வேணுகோபால சுவாமி திருக்கோவிலில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அதனை நேரில் பார்வையிட்டார் .
பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் பேசுகையில் இன்று நடக்கும் பிராண பிரதிஷ்டை விழாவை தடை செய்ய பல்வேறு முயற்சி நடைபெற்று வருகின்றன. வினோஜ் பி செல்வம் அவசர வழக்கு தொடுத்தார் அதில் யாரும் யாரையும் தடை செய்ய முடியாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது திமுக மூன்று நாட்கள் நடந்து கொண்டதற்கு சாட்டடை அடியாக இந்த தீர்ப்பு இருந்துள்ளது. தனிமனித உரிமை தடுக்கும் வகையில் கோவில்களுக்கு ஏதேனும் அனுமதி மறுக்கப்பட்டு இருந்தால் தனியாக திங்கட்கிழமை விசாரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவசர வழக்காக முதல் வழக்காக எடுத்து செயல்படுத்தியதற்கு உச்ச நீதிமன்றத்திற்கும் , உயர்நீதி மன்றத்திற்கும் நன்றி. சேலம் இளைஞர் அணி மாநாட்டுக்கு 6000 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் இருந்துள்ளனர், பொதுமக்கள் பாதிக்கப்படவில்லையா?