அயோத்தி கும்பாபிஷேகம்; அனைவருக்கும் மகிழ்ச்சி

அயோத்தி கும்பாபிஷேகம்; அனைவருக்கும் மகிழ்ச்சி

 அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் அனைவரின் மனதிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என தமிழக கவர்னர் ரவி பெருமிதமாக கூறினார். 

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் அனைவரின் மனதிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என தமிழக கவர்னர் ரவி பெருமிதமாக கூறினார்.

பிரதமர் மோடி ஸ்ரீரங்கம் ரங்கநாதரை தரிசிக்க வரும் 20ம் தேதி திருச்சி வரவுள்ள நிலையில், தமிழக ஆளுநர் ஆர் எம் ரவி தனது மனைவி, லட்சுமியுடன் இன்று ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பாரம்பரிய வேட்டி, சட்டை அணிந்து வந்த ஆளுநருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் தலைமை அர்ச்சகர் சுந்தர் பட்டர் பூரண கும்பம் மரியாதை செய்தார். அதனைத் தொடர்ந்து ஆளுநர் அரங்கநாதர்,மற்றும் தாயார் சன்னதிகளில் சாமி தரிசனம் செய்தார்.

பின்னர் ஸ்ரீ மேட்டழகிய சிங்கர் சன்னதி படிக்கட்டுகளை தனது மனைவியுடன் நீர் கொண்டு கழுவி சுத்தம் செய்தார். அதன்பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஆளுநர், அயோத்தியில் நடைபெற உள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகம் நாடு முழுவதும் உள்ள மக்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காரணம் ராமபிரான் ஒவ்வொருவரின் இதயங்களிலும் வாழ்கிறார். கோயில்களை தூய்மையாக பராமரிப்பதில் கோயில் நிர்வாகத்திற்கு மட்டுமல்ல பக்தர்களுக்கும் பெரும்பங்கு உண்டு. தூய்மை பணிகளுக்கு பாரத பிரதமர் மோடி முக்கியத்துவம் அளித்து வருகிறார். கோயில் மட்டுமல்ல பொது இடங்களிலும் தூய்மை பேண வேண்டும் என்றார்.

Tags

Next Story