பக்ரீத் : சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கம்

பக்ரீத் : சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கம்

மெட்ரோ ரயில்

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கபடுவதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது‌. நெரிசல் மிகு நேரமான காலை 8 மணி முதல் காலை 11 மணி வரையிலும் மாலை 5மணி முதல் இரவு 8 மணி வரையிலும் 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.. அதிகாலை 5 மணி முதல் காலை 8 மணி வரையிலும் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். இரவு 10 மணிமுதல் இரவு 11 மணி வரை 15நிமிட இடைவேளையில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்

Tags

Next Story