கச்சபேஸ்வரர் திருக்கோயிலில் பாலாலயம்
கச்சபேஸ்வரர் திருக்கோயிலில் பாலாலயம்
பல்லவர்களின் தலைநகரமாக விளங்கி, பழம்பெருமை, கலைச் சிறப்பு, பட்டு நெசவு என்று பல் புகழ் கொண்ட காஞ்சி மாநகரத்தில், காஞ்சியின் நடுநாயகமாக, இராஜவீதி என்னும் பிரதான சாலையில் அமைந்து அழகுறப் பொலிவது கச்சபேசம் எனப்படும் கச்சபேசுவரர் திருக்கோயிலாகும்.
திருமால் முதலிய தேவர்களும் முனிவர்களும் இந்த இறைவனை வழிபட்டதால் மூர்த்திச் சிறப்பும், நைமிசாரணிய முனிவர்களுக்கு வழிகாட்டியது முதலியவற்றால் தலச் சிறப்பாகும். வடக்கு நோக்கிய 5 நிலைகள் கொண்ட இராஜகோபுரம் , இஷ்ட சித்தீசம் என்னும் மேற்கு நோக்கிய தனிக்கோயிலை , ஒரே மதிலுக்குள் இரண்டு சிவாலயங்கள் 'உள்ளடக்கிய பெருமையும் இத்திருக்கோவிலுக்கு உண்டு.
இந்நிலையில் இத்திருக்கோயில் சுமார் மூன்று கோடி ரூபாய் மதிப்பில் திருப்பணி செய்ய முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் முதல் இரண்டு கட்டமாக மூலவர் சன்னதி தவிர அனைத்துக்கும் பாலாலையம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று மூலவர் சன்னதிக்கு பாலாலய நிகழ்விற்கான யாகசாலை பூஜைகள் துவங்கியது. மூலவர் , மூலவர்விமானம் , சண்டிககேஸ்வர் ஆகிவை களுக்கு கலசங்கள் நிறுத்தப்பட்டு பூஜைகள் திருக்குடம் புறப்பட்டு, புனித நீர் உற்றப்பட்டு பாலாலயம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து சிறப்பு தீபாராதனை மற்றும் கலந்துகொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் திருப்பணி குழு தலைவர் பெருமாள் செயலாளர் சுப்புராயன் பொருளாளர் சிற்றம்பலம் மற்றும் செங்குந்த மகாஜன காஞ்சிபுரம் தலைவர் சிவகுரு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.