கழுகுகளுக்கு ஆபத்தாக உள்ள மருந்துகளுக்கு தடை

கழுகுகளுக்கு ஆபத்தாக உள்ள  மருந்துகளுக்கு தடை
பைல் படம்
கழுகுகளுக்கு ஆபத்தாக உள்ள மருந்துகளுக்கு தடை விதிக்கப்பட்டு, நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசுத் தரப்பு தெரிவித்துள்ளது.

கழுகுகள் மரணத்துக்கு காரணமாக உள்ள மருந்துகளை கால்நடைகளுக்கு பயன்படுத்த வேண்டாம் என விவசாயிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக தமிழக அரசுத்தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அழிந்துவரும் கழுகுகளை பாதுகாக்கும் வகையில் தமிழகத்தில் நான்கு மாவட்டங்களில் கழுகுகள் பாதுகாப்பு மையம் அமைக்க கோரி விலங்குகள் ஆர்வலர் சூர்யகுமார் வழக்கு தொடர்ந்தார்.

கழுகுகளுக்கு ஆபத்தாக உள்ள மருந்துகளுக்கு தடை விதிக்கப்பட்டு, நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசுத்தரப்பு தெரிவித்துள்ளது. சத்தியமங்கலத்தில் கழுகுகள் இனப்பெருக்கத்துக்காக அடைகாத்தல் மையம் அமைக்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசு தரப்பு தெரிவித்துள்ளது. பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன், மற்றும் நீதிபதி முகமது சபிக் அமர்வு தெரிவிப்பு.

Tags

Read MoreRead Less
Next Story