பட்டிமன்றத்திற்கு அனுமதி இல்லை : காவல்துறை அறிவிப்பு!

பட்டிமன்றத்திற்கு அனுமதி இல்லை : காவல்துறை அறிவிப்பு!

அர்ஜுன் சம்பத் 

தூத்துக்குடியில் நேற்று நடைபெற இருந்த பாஜக தொடர்பான சிறப்பு பட்டிமன்றத்திற்கு காவல் துறை சார்பாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 
தூத்துக்குடி வடக்குரத வீதியில் உள்ள திருமண மண்டபத்தில் இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் "தமிழகத்தில் பாஜக வளர்ச்சிக்கு காரணம் அண்ணாமலையின் தேசிய அரசியலா அல்லது திராவிடத்தின் ஊழல் அரசியலா" என்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த பட்டிமன்றத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. இது தொடர்பாக மத்தியபாகம் காவல் நிலையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படகூடும் என்று போன் மூலம் கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணை செய்ததில் மேற்படி நிகழ்ச்சிக்கு காவல்துறையில் எந்தவித அனுமதியும் பெறவில்லை என்பதாலும், மேற்படி நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் பல்வேறு மதம், இனம் மற்றும் அரசியலை சேர்ந்த பொதுமக்கள் குடியிருந்து வருவதாலும், தாங்கள் மேற்படி சிறப்பு பட்டிமன்றத்தை நடத்தும் போது ஒருதரப்பினர் தங்களுக்கு எதிராக பிரச்சனை செய்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டு பொதுமக்களின் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் என்பதால் மேற்படி "சிறப்பு பட்டிமன்றத்திற்கு" காவல்துறை சார்பில் அனுமதி மறுக்கப்படுகிறது. தவறும் பட்சத்தில் உரிய சட்டப்படி தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story