உயிர் காக்கும் அடிப்படை பயிற்சி: இந்திய மருத்துவ சங்கம்

உயிர் காக்கும் அடிப்படை பயிற்சி: இந்திய மருத்துவ சங்கம்
X

இந்திய மருத்துவ சங்க நிர்வாகிகள்

தமிழகத்தில் அனைத்து மக்களுக்கும் உயிர் காக்கும் அடிப்படை பயிற்சி வீடு வீடாக சென்று அளிக்க உள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

இந்திய மருத்துவ சங்க தமிழ்நாடு கிளையின் புதிய தலைவராக பொறுப்பேற்க உள்ள டாக்டர் அபுல்ஹாசன் ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது , ஈரோட்டில் டிசம்பர் 8,9 மற்றும் 10 ஆகிய மூன்று நாட்கள் மாநில அளவிலான இந்திய மருத்துவ சங்க மருத்துவர்கள் மாநாடு நடைபெற உள்ளது என்றார்.

தமிழகத்தில் அனைத்து மக்களும் அடிப்படை உயிர்காக்கும் பயிற்சி அளிக்க உள்ளோம்.மாரடைப்பு அல்லது விபத்து காரணமாக இதயம் நின்றுவிட்டால் மருந்து அல்லது ஆக்ஸிஜன் இல்லாமல் கைகளால் மட்டும் நின்றுபோன இதயத்தை துடிக்கவைக்க பயிற்சி கொடுக்கும் ஜீவன் என்ற பெயரில் திட்டத்தை துவங்க உள்ளோம்.இதில் 2500 மருத்துவர்கள் வீடுவீடாக சென்று மொதுமக்களுக்கு பயிற்சி கொடுக்க உள்ளனர். இரண்டு ஆண்டுகளில் தமிழகத்தில் உள்ள அனைவரும் இத்திட்டம் மூலம் அனைவரையும் உயிர் காப்பாளராக மாற்றவுள்ளோம். செ

ன்னையில் மழையினால் நோய் தொற்று ஏற்படாமல் இருக்க அரசுடன் இணைந்து 3000 மருத்துவர்களை திங்கள் கிழமை முதல் மருத்துவ முகாம்கள் நடத்த உள்ளதாகவும் , பணியில் ஈடுபடுத்த உள்ளோம். "98432-25300" 24 மணிநேரமும் செயல்படும் மனநல மருத்துவ தொலைப்பேசி எண் அறிமுகம் செய்ய உள்ளோம்.

இதன் மூலம் தற்கொலை எண்ணம் இருந்தால் அவர்களுக்கு மனநல மருத்துவர்கள் ஆலோசனை(கவுன்சிலிங்) வழங்க உள்ளனர்.இப்பணியில் 15 மனநல மருத்துவர்கள் ஈடுபட உள்ளனர்.

Tags

Next Story