வெயிலில் கொஞ்சம் உஷாராக இருங்க !
குழந்தைகள், கர்ப்பிணிகள், வயதானவர்கள் மற்றும் நோயாளிகள் வெயிலில் செல்லக்கூடாது என பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
பொது சுகாதாரம் மற்றும் நோய்கள் தடுப்பு மருந்துவதுறை வெளியிட்டுள்ள அறிக்கையில்.. தமிழ்நாட்டில் வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் கூடுவதற்கு வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பாக தமிழகத்தின் சில பகுதிகளில் வெப்ப அலைகளின் தாக்கம் ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்திட அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது .
இந்நிலையில் பொதுமக்கள் வெளியே செல்லும் பொழுதும், வீட்டில் இருக்கும் பொழுதும் தேவையான அளவிற்கு குடிநீரை பருக வேண்டும் அடிக்கடி தண்ணீர் குடிப்பதால் வியர்வை மூலம் நீர் இழப்பு ஏற்படுவது தவிர்க்கப்படும் வெயிலால் ஏற்படும் தாக்கம் அதிக பாதிப்பு ஏற்படுத்த வாய்ப்புள்ள சாலையோர வியாபாரிகள் கட்டிடத் தொழிலாளர்கள் மகாத்மா காந்தி 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்கள் சுரங்கத் தொழிலாளர்கள் பேருந்து நடத்துனர் ஓட்டுனர் மற்றும் பயணிகள் விவசாயிகள் இணையதள வாயிலாக உணவு மற்றும் வீட்டுத் தேவை பொருட்கள் விதியோகிப்பவர்கள் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு பணியாளர்கள் குறிப்பாக போக்குவரத்துக் காவலர்கள் ஆகியோர் மிக கவனமுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
குழந்தைகள் குறிப்பாக பச்சிளம் குழந்தைகள் நோய்வாய்ப்பட்ட குழந்தைகள், கர்ப்பிணி தாய்மார்கள் வயது முதிர்ந்தோர் மற்றும் நோய்வாய் பட்டவர்கள் ஆகியோரும் மிக கவனமுடன் வெயிலில் செல்ல கூடாது அடிக்கடி வேலை நிமித்தமாக வெயிலில் செல்லும் நபர்கள், திறந்தவெளியில் வேலை செய்பவர்கள் போதிய அளவுக்கு குடிநீரை பருக வேண்டும்.ORS எனப்படும் உப்பு சர்க்கரை கரைசலை பருகுவது நலம் ஏனெனில் இத்திரவம் அதிகப்படியான வியர்வையினால் ஏற்படும் தாது உப்பு இழப்பினை சமன்படுத்த சோடியம் பொட்டாசியம் போன்ற தாது உப்புகளை உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ள அளவின்படி கொண்டுள்ளது.
பொதுமக்கள் அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நல வாழ்வு மையங்கள் (துணை சுகாதார நிலையங்கள் அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் அமைக்கப்பட்டுள்ள ORS கார்னரில் வைக்கப்பட்டுள்ள உப்பு சர்க்கரை கரைசலை பருகி தங்களை வெயிலின் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ளுமாறு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் மூலம் கேட்டுக் கொள்ளப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.