திமுக நிர்வாகிக்கு - சிறந்த இளம் தொழில் முனைவோர் விருது

திமுக நிர்வாகிக்கு சிறந்த இளம் தொழில் முனைவோர் விருது
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் ஸ்ரீராம் கார்மெண்ட்ஸ் நிறுவனத்தை கடந்த 25 ஆண்டுகளாக நடத்தி வருபவர் ராஜாராம். திமுகவின் மேற்கு மாவட்ட பொருளாளர், ஆன இவர் ஜவுளி தொழில்நுட்பம் படித்து தரமான சட்டைகளை உற்பத்தி செய்ய தனது சகோதரர்களுடன் இணைந்து போர் பிரதர்ஸ் நிறுவனத்தினை தொடங்கினார். இந் நிறுவனத்தின் வால்யும் ஜீரோ என்ற பிராண்ட் பிரபலம் அடைந்தது இவரது வால்யும் ஜீரோ பிராண்டை சந்தைப்படுத்த தமிழகத்தில் 40க்கும் மேற்பட்ட ஷோரூம்களை உருவாக்கியுள்ளார். தற்போது பல்வேறு நாடுகளுக்கும் ஆயத்த ஆடைகளை ஏற்றுமதி செய்து வருகிறார். கட்சிப் பணி ஆயத்த ஆடை உற்பத்தி என சாதனை படைத்து வரும் இவரது திறமையை பாராட்டி இந்தியா டைம்ஸ் நிறுவனம்.
106 இளம் தொழிலதிபர்கள் தமிழகத்தில் சிறந்த இளம் தொழில் அதிபர் என்றும் வளரும் தொழிலதிபர் என்றும் தேர்வு செய்துள்ளது. இவரது திறமையை பாராட்டி கோவையில் நடைபெற்ற விழாவில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் வளர்ந்து வரும் இளம் தொழில் முனைவர் விருதினை ராஜாராமிற்கு வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இளம் வயதில் விருது பெற்ற இவரை குமாரபாளையம் பகுதியில் பலரும் பாராட்டி வருகின்றனர்.
