திமுக கூட்டணிக்கு பாரத முன்னேற்றக் கழகம் ஆதரவு

திமுக கூட்டணிக்கு பாரத முன்னேற்றக் கழகம் ஆதரவு

திமுக 

மக்களவைத் தோ்தலில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பது என பாரத முன்னேற்றக் கழகம் அறிவித்துள்ளது.
பாரத முன்னேற்றக் கழக மாநிலத் தலைவா் பாரத ராஜா யாதவ் கூறியது: கடந்த காலங்களில் அதிமுக-வுக்கு ஆதரவு அளித்தும் யாதவா் சமூகத்தின் கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. எனவே, இதுவரை அதிமுக கூட்டணியை ஆதரித்து வந்த பாரத முன்னேற்றக் கழகம், 2024 மக்களவைத் தோ்தலில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு முழு ஆதரவு அளிக்கிறது. இரண்டரை ஆண்டு கால ஆட்சியில் ஈடு இணையில்லா திட்டங்களை திமுக கொண்டு வந்துள்ளது. கால்நடை வளா்ப்போா் நல வாரியம் அமைத்து யாதவ சமூகத்தில் ஒருவரை தலைவராக நியமிக்க வேண்டும். ஆவின் கூட்டுறவு அமைப்புகளுக்கு தலைவா் பதவிகளை யாதவா் சமூகத்துக்கு வழங்க வேண்டும். திருச்சி, பெரம்பலூா், தஞ்சாவூா் மட்டுமின்றி, தமிழகம், புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபடவுள்ளோம் என்றாா்.

Tags

Next Story