மாநில விருதுக்கு பாரத சாரண, சாரணியர் தேர்வு முகாம்

மாநில விருதுக்கு பாரத சாரண, சாரணியர் தேர்வு முகாம்
X

மாநில விருதுக்கு பாரத சாரண, சாரணியர் தேர்வு முகாம்

இதில் 141 சாரண சாரணியர்கள் கலந்து கொண்டனர்
பாரத சாரண, சாரணியர் இயக்கத்தின் சேலம் ஊரக மாவட்டத்தின் சார்பில் மாநில விருதுக்கான தேர்வு முகாம் சேலம் குரங்குச்சாவடியில் உள்ள அரைஸ் சி.பி.எஸ்.இ மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. பாரத சாரண, சாரணியர் மாவட்ட செயலர் சரவணன் வரவேற்றார். இதில், சாரணர், சாரணியர் 141 பேர் கலந்து கொண்டனர். இந்த முகாமில், சேலம் மாவட்ட கல்வி அலுவலரும், சேலம் ஊரக சாரண மாவட்டத்தின் முதன்மை ஆணையருமான மோகன், மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) முத்துராமன் ஆகியோர் தேர்வை தொடங்கி வைத்து பேசினர். முதன்மை தேர்வாளர்களாக நாமக்கல்லை சேர்ந்த பாலசுப்ரமணியம், வால்பாறையை சேர்ந்த ரூத்பேபி ஆகியோர் செயல்பட்டு சாரணர், சாரணியரை தேர்வு செய்தனர். முடிவில், அருள் பிரகாஷ் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை மாறன், சீனிவாசன் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags

Next Story