அரசு ஆதிதிராவிடர் பள்ளியில் பாரதியார் பிறந்தநாள் விழா

அரசு ஆதிதிராவிடர் பள்ளியில் பாரதியார் பிறந்தநாள் விழா

பாரதி பிறந்த நாள் கொண்டாட்டம்

அரசு ஆதிதிராவிடர் பள்ளியில் பாரதியார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

தென்கீரனுார் அரசு ஆதிதிராவிடர் நல நடுநிலைப் பள்ளியில் பாரதியார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.இந்த விழாவிற்கு, ஊராட்சி தலைவர் வெண்ணிலா தலைமை தாங்கினார்.துணைத் தலைவர் சரண்ராஜ், வார்டு உறுப்பினர் கமலா, அருள் முன்னிலை வகித்தனர்.

பள்ளி தலைமையாசிரியை அருள்மணி வரவேற்றார். விழாவில், மாணவர்களுக்கு பாட்டு,பேச்சு, கட்டுரை, நடனம், கவிதை உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது. விழாவில் வி.ஏ.ஓ., ஜெயபிரகாஷ், கல்வியாளர் செந்தில்குமார், பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் சரண்யா, டாக்டர்கள் நிதிஷ்குமார், ராமலிங்கம் உட்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story