பரமத்தி வேலூர் மருத்துவமனையை தரம் உயர்த்த பூமி பூஜை

பரமத்தி வேலூர் மருத்துவமனையை தரம் உயர்த்த பூமி பூஜை
X

பூமி பூஜையில் கலந்து கொண்டவர்கள் 

பரமத்தி வேலூர் மருத்துவமனையை தரம் உயர்த்தி ரூ.23.75 கோடி மதிப்பீட்டில் தரம் உயர்த்த பூமி பூஜை விழா இன்று நடைபெற்றது.

பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த ரூ.23.75 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் ஒப்புதலோடு கட்டுமான பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது.

இதில் 50 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு கட்டடம் தரைதளம்,முதல் தளம்,இரண்டாம் தளம் மற்றும் நான்காம் தளத்துடன் அமைக்கப்பட உள்ளது. இக்கட்டடத்தில் மூன்று அறுவை சிகிச்சை பிரிவும், நவீன டயாலிசிஸ் பிரிவும் அமைக்கப்பட உள்ளது. விழாவிற்கு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ச.உமா தலைமை வகித்து பூமி பூஜை தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டி வைத்தார்.

நகர அமைப்பு மண்டல திட்ட குழு உறுப்பினர் மதுரா செந்தில்,நாடாளுமன்ற உறுப்பினர் AKP.சின்ராஜ் ஆகியார் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்வில் வேலூர் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் ஜெயந்தி,வேளாம்மை இணை இயக்குனர் திறைசாமி,மருத்துவ பணிகள் இணை இயக்குனர் (பொறுப்பு) வாசுதேவன்,மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ராமச்சந்திரன் மற்றும் ஒன்றிய,பேரூர் கழக செயலாளர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள்,

சார்பு அணி நிர்வாகிகள், கழக தோழர்கள் பொதுமக்கள், துறை சார்ந்த அலுவலர்கள் என பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

Tags

Next Story