செங்கம் அருகே பயங்கர விபத்து - 7 பேர் உயிரிழப்பு

செங்கம் அருகே பயங்கர விபத்து -  7 பேர் உயிரிழப்பு

விபத்துக்குள்ளான அரசு பேருந்து , கார்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே அரசுப் பேருந்தும் காரும் நேருக்கு மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.

தர்மபுரியில் இருந்து திருவண்ணாமலை நோக்கி அரசுப் பேருந்து ஒன்று நேற்று இரவு வந்துகொண்டிருந்தது. அதேபோல், திருவண்ணாமலையில் இருந்து பெங்களுரூ நோக்கி கர்நாடகா பதிவு கொண்ட ஒரு டாடா சுமோ காரும் வந்துகொண்டிருந்தது. இந்த இரு வாகனங்களும் திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே கருமங்குளம் அருகே வந்துகொண்டிருந்தபோது நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் காரில் பயணித்த 11 நபர்களில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும், இருவர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது வழியில் பலியாகினார். மேலும், காரில் இருந்த மற்ற 4 பேரும், அரசுப் பேருந்தில் காயம் அடைந்த சிலரும் செங்கம் மற்றும் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டுள்ளனர். விபத்தில் இறந்தவர்களின் உடல் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விபத்து பகுதியில் போலீஸாரும், தீயணைப்புத் துறையினரும் விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு வந்து மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ், மாவட்ட கண்காணிப்பாளர் கி. கார்த்திகேயன் ஆகியோர் ஆய்வு நடத்தினர். காரில் பயணித்தவர்கள் சிலர் அசாமை பூர்வீகமாகக் கொண்டு பெங்களூரில் பணிக்காக தங்கி இருந்து வேலை செய்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

Tags

Read MoreRead Less
Next Story