ஸ்டெர்லைட் ஆலை மூடக்கூடாது என போராடியது பாஜகவும் அதிமுகவும் - கனிமொழி பேச்சு
தேர்தல் பிரச்சாரம்
தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடம் இந்தியா கூட்டணி தி.மு.க வேட்பாளர் கனிமொழி கருணாநிதி இன்று ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள குறுக்குச்சாலை பகுதியில் மக்களை நேரடியாகச் சந்தித்து தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வாக்குகளை சேகரித்தார். பிரச்சாரத்தில் பேசிய கனிமொழி கருணாநிதி,
இந்த தேர்தல் என்பது மிக முக்கியமான ஒரு தேர்தல் இந்த நம்முடைய உரிமைகளை மீட்க மற்றும் மாணவர்கள் படிக்க வேண்டும் என்றால் அதற்கு ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம் வர வேண்டும். எப்படி நீட் பரிச்சை கொண்டு வந்து மருத்துவம் சேராமல் தடுத்தார்களோ, அதே போல் புதிய கல்விக் கொள்கை கொண்டு வந்து கல்லூரியில் சேரும்போது அதில் ஒரு நுழைவுத் தேர்வு வைக்கப்படும்.
நம்முடைய முதலமைச்சர், பெண் பிள்ளைகள் கல்லூரியில் படிக்கப் போகும்போது புதுமைப்பெண் திட்டம். அதே போல் இளைஞர்கள் கல்லூரி படிக்க வேண்டும் என அவர்களுக்கும் தமிழ் புதல்வன் திட்டத்தின் வழியாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். இந்த நாட்டில் இட ஒதுக்கீடு இருக்கிறது. விவசாயிகள் உரிமைகள், பெண்கள் உரிமைகள் அனைத்தும் பாதுகாக்க வேண்டும் என்றால் வரக்கூடிய தேர்தலில் நாம் பாஜகவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும், இந்தியா கூட்டணி ஆட்சியை உருவாக்க வேண்டும்.