முதலமைச்சர் பதவி விலக வேண்டும் - எல். முருகன்!
எல் முருகன்
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் நீலகிரி தொகுதியில் பா.ஜ.க., சார்பில் போட்டியிட்ட மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், நீலகிரி மாவட்டத்தில் வாக்காளர்களிடம் நன்றி தெரிவித்தார்.
ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் எல். முருகனுக்கு பா.ஜ.க., வினர் வரவேற்பு அளித்தனர். இதன்பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் கஞ்சா, கள்ள சாராயம் ஓடுகிறது. கள்ளக்குறிச்சியில் ஆளும் கட்சி ஆட்கள் உதவியுடன் பல வருடங்களாக அங்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுவரை 50 பேர் இறந்திருக்கிறார்கள்.
அமைச்சர் முத்துசாமி தார்மீகப் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும். முதலமைச்சர் ஸ்டாலின் மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். கடந்த முறை அரக்கோணத்தில் உயிரிழப்பு ஏற்பட்டும் தி.மு.க அரசின் கையாலாகத தனத்தால் இந்த பேரழிவு நடந்துள்ளது. இதற்கு தீர்வு காண பூரண மது விலக்கு கொண்டு வர வேண்டும். யோகா கலை அனைத்து மக்களிடமும் கொண்டு சென்று, மக்களை நல்வழிப்படுத்த வேண்டும். ஒவ்வொரு கிராமத்திலும் இளம் விதவைகள் அதிகமாகி வருகிறார்கள். எதிர் கட்சிகளுக்கு சட்ட சபையில் பேச கூட உரிமையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.