பாஜக தேர்தல் கூட்டணி ஒருங்கிணைப்புக் குழு ஆலோசனை கூட்டம்

சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமையகமான கமாலாலயத்தில், தமிழக பாஜக கூட்டணி ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடைபெறுகிறது.

சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமையகமான கமாலாலயத்தில், தமிழக பாஜக கூட்டணி ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடைபெறுகிறது. இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர்கள் எல் முருகன், விகே சிங் சட்டமன்ற கட்சி தலைவர் நயினார் நாகேந்திரன், தேசிய செயற்குழு உறுப்பினர் H ராஜா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் அடங்கிய குழு ஆலோசனையில் ஈடுபடுகின்றனர்.

பாஜக ஏற்கனவே தமிழ் மாநில காங்கிரஸ், இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதி கட்சி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், சமத்துவ மக்கள் கட்சி, இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகள் கூட்டணியில் உள்ளனர். இந்த நிலையில் கூட்டணி சம்பந்தமான அடுத்தடுத்த நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் தமிழக பாஜக அலுவலகத்தில் நடைபெறுகிறது.

Tags

Next Story