4 வது கட்டத்திலேயே பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைத்து விட்டது - ஹெச்.ராஜா

4 வது கட்டத்திலேயே பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைத்து விட்டது - ஹெச்.ராஜா

ஹெச்.ராஜா 

நாடு முழுவதும் நடந்து முடிந்த 4 கட்ட மக்களவைத் தோ்தலிலேயே பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைத்து விட்டது என பாஜக முன்னாள் தேசிய செயலா் ஹெச்.ராஜா தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நேற்று சுவாமி தரிசனம் செய்த அவா், பின்னா், செய்தியாளா்களிடம் கூறியதாவது:

நாடு முழுவதும் நடந்த 4 கட்ட மக்களவைத் தோ்தலில் 380 தொகுதிகளில் வாக்குப் பதிவு முடிந்துள்ளது. இந்தத் தொகுதிகளிலேயே மூன்றாவது முறையாக மோடி பிரதமராக பெரும்பான்மை கிடைத்து விட்டது. வயநாட்டில் தோற்பது உறுதி என தெரிந்துதான் ரேபரேலி தொகுதியிலும் ராகுல் காந்தி போட்டியிடுகிறாா். யூடியூபா் சவுக்கு சங்கரை கைது செய்ததில் ஆட்சேபணை இல்லை. அதன்பிறகு அவரது கையை ஒடித்துள்ளது காவல்துறையின் மோசமான நடவடிக்கை.

அவரைப் போல பேசிய திமுக அமைச்சா்கள் தா.மோ.அன்பரசன், அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் ஆகியோா் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? முதல்வா் மு.க.ஸ்டாலின் தன் கீழுள்ள காவல்துறையை துஷ்பிரயோகம் செய்யக் கூடாது. தமிழ்நாட்டில் ஒவ்வொரு துறையிலும் தவறு நடந்து கொண்டிருக்கிறது. நிதிநிலை மிக மோசமாக உள்ளது. அரசு ஊழியா்களுக்கு ஊதியம் வழங்க முடியாத நிலைகூட வரலாம். சிஏஏ என்பது மத ரீதியாக துன்புறுத்தப்பட்டு வெளியேற்றப்படுவோருக்கு குடியுரிமை வழங்கும் சட்டமாகும். இதுகுறித்து தமிழகம், கேரள முதல்வா்களுக்கு புரிதல் இல்லை. என்றாா்.

Tags

Next Story