பாஜகவிற்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லை - கனிமொழி

உத்திரப் பிரதேசம் பின்தங்கிய மாநிலமாக இருப்பதற்கு காரணம் பாஜக தான்.அங்கு திராவிட மாடல் ஆட்சி இல்லை. அதன் காரணமாக உத்திரப் பிரதேசம் வளரவில்லை. மத்தியில் நடப்பது ஆட்சி இல்லை, கேலி கூத்து. தமிழகம் இன்று அந்நிய முதலீடு, ஆரோக்கியம் கல்வி உள்ளிட்ட எந்த அளவுகோலில் பார்த்தாலும் முன்னேறிய முதல் மாநிலமாக உள்ளது. பாஜக அரசுக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லை, பாசிச ஆட்சி நடத்துகிறது, இந்த ஆட்சியால் எந்த பிரிவினருக்கும் நன்மை இல்லை என கனிமொழி எம்.பி தெரிவித்தார்.

விருதுநகர் நகராட்சி மைதானத்தில் "உரிமைகளை மீட்க ஸடாலினின் குரல்" என்ற தலைப்பில் விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதி பரப்புரைக் கூட்டம் திமுக துணைப்பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி தலைமையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ். எஸ்.ஆர் இராமச்சந்திரன் மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் பேசிய கனிமொழி மத்திய பாஜக அரசை கடுமையாக சாடினார். டெல்லியில் விவசாயிகள் ஒரு ஆண்டுக்கு மேலாக பல இன்னல்களுக்கு மத்தியில் போராடினார்கள். அவர்களை முடக்க மத்திய அரசு பல முயற்சி செய்தது. மத்திய அரசு கொண்டு வரும் எந்த சட்டத்தையும் எதிர்க்க கூடாது. பாஜக ஆட்சியில் குறைந்த அளவு நாடாளுமன்ற கூட்டத்தொடரே நடந்துள்ளது. பிரதமருக்கே பாதுகாப்பு இல்லை என நியாயம் கேட்டதற்கு எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டோம்.

எதிர் கட்சியே இல்லாமல் நாடாளுமன்றம் நடத்திய பெருமை பாஜகவை சேரும். பாசிம் வீழட்டும். இந்தியா கூட்டணி வெல்லட்டும். விருதுநகர் திராவிட இயக்கத்துடன் பயணம் செய்யக் கூடிய மண். மத்தியில் உள்ள பாசிச பாஜக அரசை விரட்டுவோம். இந்தியாவை மீட்போம்100 நாள் வேலை செய்பவர்களுக்கு மாத கணக்காக ஊதியம் வரவில்லை. தமிழ்நாட்டுக்கு நிதியை கொடுப்பதில்லை. தமிழ்நாட்டில் பெறப்படும் நிதியை கொடுப்பதில்லை. மத்திய அரசு வழிப்பறியில் ஈடுபடுகிறது. உத்திரப் பிரதேசம் பின்தங்கிய மாநிலமாக இருப்பதற்கு காரணம் பாஜக தான்.அங்கு திராவிட மாடல் ஆட்சி இல்லை. அதன் காரணமாக உத்திரப் பிரதேசம் வளரவில்லை. மத்தியில் நடப்பது ஆட்சி இல்லை. கேலி கூத்து” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மத்திய அரசுக்கு தமிழகம் ஜி.எஸ். டி மூலம் 1 ரூபாய் கொடுத்தால்,திருப்பி மத்திய அரசு கொடுப்பது 26 பைசா மட்டுமே அதே நேரத்தில் உத்தர பிரதேசத்திற்கு 2 ரூபாய் 2 பைசா கொடுக்கப்படுகிறது. காரணம் பின்தங்கிய மாநிலம் என்கிறார்கள். மேலும் பேசிய கனிமொழி தமிழகம் இன்று அந்நிய முதலீடு, ஆரோக்கியம் கல்வி உள்ளிட்ட எந்த அளவுகோலில் பார்த்தாலும் முன்னேறிய முதல் மாநிலமாக உள்ளது என்றார். பாஜக அரசுக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லை என்றும் பாசிச ஆட்சி நடத்துகிறது என்றும் இந்த ஆட்சியால் எந்த பிரிவினருக்கும் நன்மை இல்லை என்றார்.

Tags

Next Story