பாஜகவிற்கு வருங்காலம் கிடையாது - கனிமொழி எம்பி
கனிமொழி எம்பி
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட கனிமொழி கருணாநிதி அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற சான்றிதழை வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட ஆட்சித் தலைவரும் தேர்தல் பொறுப்பாளருமான லட்சுமிபதியிடம் கனிமொழி கருணாநிதி பெற்றுக் கொண்டார். அப்போது அமைச்சர்கள் கீதா ஜீவன் அனிதா ஆர் ராதா கிருஷ்ணன் மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.
பின்னர் கனிமொழி கருணாநிதி செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசும்போது இரண்டாவது முறையாக தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளித்த கழக தலைவர் அண்ணனுக்கு நன்றி இந்த வெற்றிக்காக பாடுபட்ட மாவட்ட அமைச்சர்கள், கழக மேயர், சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி தொண்டர்கள் அனைவருக்கும் நன்றி இரண்டாவது முறையாக எனக்கு வெற்றிக்கு வாய்ப்பளித்த தூத்துக்குடி தொகுதி மக்களின் அத்தனை பேருக்கும் மனமார்ந்த தலை தாழ்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த நாட்டிற்கு எதிராக தொடர்ந்து மக்களை அச்சுறுத்தி இருக்க கூடியது எல்லாம் பிஜேபிக்கு எதிர் மறையாக உருவாக்கி உள்ளது என்று மக்கள் இதை தெளிவாக உணர்த்துகின்றனர். தமிழ்நாட்டில் பிஜேபிக்கு இடமே இல்லை என்று சொல்ல கூடிய அளவிற்கு 40க்கு 40 தொகுதியின் வெற்றி பெற்றுள்ளது. பாஜகவிற்கு எதிராக கிடைத்திருக்க கூடிய வெற்றி பாஜகவிற்க்கு வருங்காலம் கிடையாது என்றார் தங்களின் தேர்தல் அறிக்கை மீது மக்களுக்கு நம்பிக்கை உள்ளது அதை போல் எதிர்க்கட்சி மேல் நம்பிக்கை இல்லாததால் தான் மக்கள் எங்களுக்கு வாக்களித்துள்ளனர் என கனிமொழி கருணாநிதி தெரிவித்தார்.