தமிழகத்தில் 10 இடங்களில் பாஜக..!

தமிழகத்தில் 10 இடங்களில் பாஜக..!
பாஜக 

மத்திய சென்னை, தென் சென்னை, கோவை, நீலகிரி, நெல்லை, புதுவையில் பாஜக வேட்பாளர்கள் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளனர்.

தமிழகம் மற்றும் புதுவையில் 10 தொகுதிகளில் பாஜக கூட்டணி இரண்டாம் இடத்தை தக்கவைத்துள்ளது.

தேனியில் பாஜக கூட்டணியில் போட்டியிட்ட வேட்பாளர் அமமுக டிடிவி தினகரன் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.

ராமநாதபுரத்தில் பாஜக கூட்டணியில் போட்டியிட்ட ஓ.பன்னீர்செல்வம் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.

வேலூர் தொகுதியில் பாஜக சின்னத்தில் போட்டியிட்ட ஏசி சண்முகம் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.

தர்மபுரியில் பாஜக கூட்டணியில் போட்டியிட்ட பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி தொடர்ந்து முன்னிலை வகுத்து வருகிறார்.

Tags

Next Story