பாஜக தமிழகத்தில் பூத் அளவில் கூட வலிமை இல்லாத கட்சி - நடிகை கௌதமி
நடிகை கௌதமி பிரசாரம்
தென் சென்னை அதிமுக வேட்பாளர் ஜெயவர்தனுக்கு ஆதரவாக அதிமுக தலைமை கழகப் பேச்சாளர் நடிகை கெளதமி சென்னை காரப்பாக்கம் கங்கை அம்மன் கோவில் தெருவில் திறந்து வெளி வாகனத்தில் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பேசிய கௌதமி, 5 வருடம் கழித்து முக்கியமான தருணத்தில் நிற்கிறோம்.கடந்த 5 வருடத்தில் பலவற்றை நீங்கள் பார்த்துள்ளீர்கள், மழை வெள்ளம், மாதாமாதம் மின் கட்டண உயர்வு,விலை வாசி உயர்வு, போதைப் பொருள் நடமாட்டம் உள்ளிட்டவற்றை நீங்கள் பார்த்துள்ளீர்கள். இவற்றை எல்லாம் பார்த்த நீங்கள் தேர்ந்தெடுத்த திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியனை பார்க்கவில்லை. உங்கள் தேவைகளுக்கு உங்களுக்காக உழைக்கும் ஒரு இளைஞர்தான் அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன். திமுக ஆட்சிக்கு வந்த உடன் நிறைய மாற்றங்கள் நடந்துள்ளது. அது அனைவருக்கும் உணவளித்த அம்மா உணவகம் , அம்மா மினி கிளினிக்குகள் மூடப்பட்டதுதான் என்றார்.
இந்தியா முழுவதும் பேசும் படி ஒரு கதையை உருவாக்கியுள்ளனர். கச்சத்தீவு பற்றி பேசுவதற்கு உருவாக்கிய காரணம் தமிழ்நாட்டில் பாஜாக நின்று, நியாயமாக பேசி ஓட்டு வாங்கக் கூடிய சக்தி இல்லாததால் எத்தனையோ வருடங்களுக்கு முன்னர் எத்தனையோ வருடங்களுக்கு முன்பு ஜெயலலிதா அவர்களின் முயற்சி செய்து உச்சநீதிமன்றம் வரை சென்றனர். கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த பிரதமர் மோடி எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல்,தேர்தல் தேதி அறிவித்த பின்னர் கச்சத்தீவை பற்றி பேசி வருகிறார்கள். இந்தியா - சீனா நாட்டின் எல்லைப் பகுதிகளில் நடைபெறும் பிரச்சினைகள் பற்றி பாஜகவினர் பேசவில்லை.
இதைப் பற்றி கேட்டால் சொல்ல மாட்டார்கள்.இன்று நாம் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும். தேசிய கட்சியாக இருந்தாலும்,மாநில கட்சி திமுகவாக இருந்தாலும் மக்களின் நலன்களுக்காக பாடுபடவில்லை. வாரிசு அரசியல் ஒரு கட்சி என்றால்,காங்கிரஸ் கட்சியை இந்தியாவில் இருந்து மீட்கிறேன் என்று சொல்லி ஒரு ஒலி எழுப்பி வருகிறார்கள். காங்கிரஸ் கட்சியில் இருந்து கொண்டு ஊழல் வழக்கில் மாட்டிக்கொள்ளும் தலைவர்களை பாஜாகவில் சேர்த்துக் கொள்கிறார்கள். தமிழகத்தில் பாஜாகவின் அமைப்பு எந்த அளவில் இருக்கிறது என்பதை நாம் பார்க்க வேண்டும்.
பாஜக பூத் அளவில் ஒரு வலிமை இல்லாத கட்சியாக இருக்கிறது. தமிழகத்தில் இறங்கி வேலை செய்யாதவர்களுக்கு உங்களது ஓட்டை வீணாக்காதீர்கள். எத்தனை அதிமுக வேட்பாளர்களை தேர்ந்தெடுத்து டெல்லி அனுப்பிவீர்களோ அனைவரும் தமிழர்களின் குரலாக பணியாற்றுவார்கள். இங்கு நடக்கும் அநியாயங்களுக்கு எதிராக நீங்கள் முடிவெடுக்கும் சந்தர்ப்பம் இது. 19 ம் தேதி இரட்டை இலைக்கு உங்களுடைய வாக்குகளை செலுத்துங்கள், செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா ? என்று கேட்டார்.