பாஜக சின்னம் வழக்கு: தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
தேசிய மலர் தாமரையை பாஜக கட்சி சின்னமாக ஒதுக்கீடு செய்ததை எதிர்த்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.
தேசிய மலரான தாமரையை, பாரதிய ஜனதா கட்சி சின்னமாக ஒதுக்கீடு செய்ததை எதிர்த்த வழக்கின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.
தாமரையை ஒர் அரசியல் கட்சிக்கு ஒதுக்கியது அநீதி, நாட்டின் ஒருமைபாட்டை இழிவுபடுத்துவதாக T.ரமேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்தார். பாஜகவுக்கு தாமரை சின்னம் ஒதுக்கீடு செய்ததை ரத்து செய்யக்கோரி இந்திய தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை மனு அளித்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags
Next Story