அண்ணாமலை தலைமையில் பாஜக மீட்டிங்.. அடுத்த பிளான் என்ன?

அண்ணாமலை தலைமையில் பாஜக மீட்டிங்.. அடுத்த பிளான் என்ன?

 அண்ணாமலை 

சர்வதேச அரசியல் கல்வி கற்பதற்காக லண்டன் செல்லவிருக்கும் பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை, அதற்கு முன்னதாக ஆகஸ்ட் 11ஆம் தேதி கட்சி திருப்பூரில் மாவட்ட தலைவர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

பாஜக தமிழ்நாடு தலைவராக அண்ணாமலை பதவியேற்று மூன்று ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியல் குறித்த கல்வியை பயில அண்ணாமலை திட்டமிட்டுள்ளார். வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு அவரது பதவி நீட்டிப்பு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

இந்நிலையில், தமிழ்நாடு பாஜக மாவட்ட தலைவர்கள் கூட்டம் ஆகஸ்ட் 11ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் மாதத்தில் கட்சி நிர்வாகிகள் மாற்றம் தொடர்பான பணிகளை மாவட்ட தலைவர்கள் தொடங்க வேண்டும் என்றும், கட்சியில் சிறப்பாக செயல்பட்டவர்கள், இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்குவது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் குறித்து இக்கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story