பாஜக விளம்பரங்கள் வெளியிட கூடாது.!. உயர்நீதிமன்றம்.. உச்சநீதிமன்றம் அதிரடி..!
உச்சநீதிமன்றம்
திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான பாஜக விளம்பரங்கள் வெளியிட கொல்கத்தா உயர்நீதிமன்றம் விதித்த தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருவதால் அங்கு தேர்தல் விதிமுறைகளை மீறும் விதமாக எந்தவித விளம்பரத்தையும் பாஜக வெளியிடக்கூடாது என கொல்கத்தா நீதிமன்ற தனி நீதிபதி கடந்த 20-ம் தேதி தடை விதித்தார்.
அப்போது அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், ‘பாஜகவின் விளம்பரத்தை பார்த்தோம், அது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை அவமதிக்கும் வகையில் உள்ளது. பாஜகவின் விளம்பரம் வாக்காளர்களின் நலன்களுக்கு ஆதரவாக இல்லை என்பதால் கொல்கத்தா உயர்நீதிமன்ற உத்தரவில் தலையிட விரும்பவில்லை என கூறி மனுவை தள்ளுபடி நீதிபதிகள் செய்தனர். மேலும் அனைத்து அரசியல் கட்சிகளும் ஆரோக்கியமான அரசியலை முன்னெடுக்க வேண்டும் என நீதிபதிகள் வேண்டுகோள் விடுத்தனர்.
பாஜக தன்னைப்பற்றி பெருமை பேசலாமே தவிர, எதிர்க்கட்சிகளை கீழ்த்தரமாக விமர்சிக்கக் கூடாது எனக்கூறி பாஜகவின் மேல்முறையீடு மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.