Annamalai: ஒரே ஆண்டில் ரூ.4 லட்சம் கோடி வேண்டுமா ? - புது ஐடியா சொன்ன அண்ணாமலை!

Annamalai: ஒரே ஆண்டில் ரூ.4 லட்சம் கோடி வேண்டுமா ? - புது ஐடியா சொன்ன அண்ணாமலை!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

கோடிகளில் பணம் கொட்ட புதிய ஐடியா சொன்ன அண்ணாமலையை பார்த்து ஷாக் ஆன முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Annamalai:தமிழகத்தின் பட்ஜெட் மூன்று லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் நிலையில், ஒரே ஆண்டில் நான்கு லட்சம் கோடி ரூபாய் வருமானம் கிடைக்க புது ஐடியாவை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்

நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி தேசிய கட்சிகள் முதல் மாநிலத்தின் பிரதான கட்சிகள் வரை தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே என் மண் என் மக்கள் நடைப்பயணத்தை தொடங்கிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சென்னையில் தனது யாத்திரையை நடத்தினார். அப்போது பேசிய அவர், தமிழகத்தின் வருவாயை உயர்த்த புது ரூட் சொல்லி கொடுத்துள்ளார்.

மக்களிடம் பேசிய அண்ணாமலை, அயோத்தியில் கட்டப்பட்ட ராமர் கோவில் பற்றி பேசினார். ராமர் கோவிலால என்ன பயன்? என சில எதிர்கட்சியினர் கேள்வி எழுப்பி வருவதால் புள்ளி விவரங்களை வெளியிட்ட அதிர்ச்சி கொடுத்துள்ளார் அண்ணாமலை.

அண்ணாமலை பேசும்போது, “ தமிழ்நாட்டில் சில கட்சிகள் அயோத்தி ராமர் கோவிலால் என்ன பயன் இருக்கு.. என்று தொலைக்காட்சிகளில் விவாதங்களில் பேசுகின்றனர். உலகில் உள்ள இஸ்லாமியர்கள் மசூதிக்கும், கிறிஸ்தவர்கள் சர்ச்சுகளுக்கும், இந்துக்கள் கோவில்களுக்கும் செல்கின்றனர். அனைத்து மதத்தினர் அவரவர் விரும்பும் இடங்களுக்கு செல்கின்றனர்.

சவூதி அரேபியாவில் உள்ள மெக்காவுக்கு நம் நாட்டில் உள்ள இஸ்லாமிய சொந்தங்கள் ஆண்டுக்கு 2 கோடி பேர் ஹஜ் புனித யாத்திரை செல்கின்றனர். இதனால், சவுதி அரேபியாவுக்கு 12 பில்லியன் டாலர் அளவுக்கு வருமானம் கிடைக்கிறது. கிறிஸ்தவ நண்பர்கள் வாடிக்கனுக்கு போப் ஆண்டவரை பார்க்க 80 லட்சம் பேர் செல்கின்றனர். அதனால், ரூ.315 மில்லியன் டாலர் அளவுக்கு வருமானம் கிடைக்கிறது.

நமக்கு பக்கத்தில் இருக்கும் திருப்பதிக்கு இரண்டரை கோடி பேர் செல்கின்றனர். கடந்த ஆண்டு மட்டும் திருப்பதி கோயில் வருமானம் ரூ.1,200 கோடியாக உள்ளது. இப்படி இருக்கும்போது அயோத்திக்கு அடுத்த ஆண்டு சுமார் 5 கோடி பேர் செல்வார்கள் என்று ஆய்வு ஒன்று கூறுகிறது. இதன் மூலம் உத்திர பிரேதேச அரசுக்கு 4 லட்சம் கோடி ரூபாய் வருமானம் கிடைக்கலாம். இந்த வருமானம் ஆட்டோ ஓட்டுநரில் தொடங்கி பூ விற்கும் அக்காவிடம் இருந்து கிடைக்கும். இப்படி கிடைக்கும் வருமானத்தில் உத்தரபிரதேச அரசுக்கு வரி மட்டுமே ரூ.25 கோடி கிடைக்க உள்ளது. தமிழக அரசின் ஓராண்டு பட்ஜெட் 3 லட்சம் கோடி ரூபாய். ஆனால் உத்தரபிரேசத்தின் ஆண்டு வருமான 4 லட்சம் கோடி ரூபாயாக இருக்க போகிறது.

அதை போல் தமிழகத்தையும் மாற்றலாம். தமிழகத்தில் ஏராளமான கோவில்கள் உள்ளன. வேளாங்கண்ணி சர்ச், நாகூர் தர்கா இன்னும் பல இடங்களில் முக்கிய கோவில்கள் உள்ளன. அவற்றை எல்லாம் ஒன்றாக இணைத்தாலே தமிழச்கத்தின் வருமானம் சாதாரணமாக ரூ. 3 லட்சம் கோடியை தாண்டி வரும்” என்றார்.

மக்களை வழிநடத்தி செல்லும் அரசியல் கட்சி தலைவர்கள், மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் தரமான கல்வி, அதிக வேலை வாய்ப்பு, சுய தொழில் பெருக்கம், மருத்துவ வளர்ச்சி குறித்து பேசுவது அவசியமானது. ஆனால், அதை தவிர்த்து வழிபாட்டு தலங்களின் மூலம், அதை மேம்படுத்துவதன் மூலமும் வருமானத்தை அதிகரிக்கலாம் என்று தேசிய கட்சியை சேர்ந்த மாநில தலைவரான அண்ணாமலை பேசியிருப்பது எந்த மாதிரியான அரசியல் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

ஜனநாயக நாடு என்று கூறிவரும் இந்தியாவில் வழிபாட்டு தலங்கள் மூலமாக தான் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த முடியும் என்ற அண்ணாமலை போன்றோரின் தொலைநோக்கு அரசியல் பார்வை தேர்தல் களத்தில் கேலிகுத்தாக்கியுள்ளது.

Tags

Next Story