பாஜக மாநில தலைவர் அண்ணாமலை டெல்லி பயணம்

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை டெல்லி பயணம்

அண்ணாமலை

பரபரப்பான நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் டெல்லி செல்கிறார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.

நாடாளுமன்ற தேர்தலை நெருங்குவதை முன்னிட்டு, டெல்லியில் பா.ஜ.க. சார்பில் வருகிற 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. 2 நாள் நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக, தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் 16 ஆம் தேதி டெல்லி பயணம் மேற்கொள்கின்றனர்.

டெல்லி செல்லும் அண்ணாமலை நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா உள்ளிட்ட முக்கிய தலைவர்களை சந்தித்து விரிவாக ஆலோசனை மேற்கொள்கிறார்.

கூட்டணி குறித்து மறைமுக பேச்சுவார்த்தை நடத்திவரும் கட்சிகள் குறித்த விருப்பம் உள்ளிட்டவைகளை மேலிடத்தில் விவாதிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story