பாஜக-தமாகா கூட்டணி? ஜி.கே வாசன் பேட்டி!

பாஜக-தமாகா கூட்டணி? ஜி.கே வாசன் பேட்டி!

 ஜி.கே வாசன் பேட்டி!

தேர்தல் களப்பணிகளை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாகவே தொடங்கியுள்ளது என தமாகா கட்சித் தலைவர் ஜி.கே வாசன் பேட்டியளித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலுக்கான களப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் செய்தியாளர்களை சந்தித்த தமாகா கட்சித் தலைவர் ஜி கே வாசன், " நவம்பர் மாதம் தொடங்கி தமாகா சார்பில் மூன்று மண்டல கூட்டங்கள் நடத்தியுள்ளோம். ஒரே நாடு ஒரே தேர்தல் கொள்கையை தமாகா ஆதரிப்பதால் அந்த ஆயத்திற்கு கடிதம் எழுதியுள்ளேன். மக்களவைத் தேர்தலின் தேதி குறித்த அறிவிப்பு இன்னும் 2 அல்லது 3 வாரங்களில் வெளியாக உள்ளது. அதற்கான களப்பணிகளை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாகவே தொடங்கியுள்ளது. பாஜக உடனான கூட்டணி குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்" எனத் தெரிவித்தார்.

Tags

Next Story