400 இடங்களில் வென்று பாஜக ஆட்சி அமைக்கும் - அண்ணாமலை

400 இடங்களில் வென்று பாஜக ஆட்சி அமைக்கும் - அண்ணாமலை

பொதுக்கூட்டத்தில் பேசும் அண்ணாமலை 

வரும் மக்களவை தேர்தலில் பா.ஜ.க 400 இடங்களில் வென்று ஆட்சியை பிடிக்கும் என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

சங்ககிரி அக்கம்மாபேட்டை பகுதியில் பகுதியில் தொடங்கிய நடை பயணமானது சங்ககிரி புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம் வழியாக புதிய எடப்பாடி சாலை பகுதியில் முடிவடைந்தது. பின்னர் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் சங்ககிரியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பாஜக மாநிலத்துணைத்தலைவர் வி.பி.துரைசாமி, அதிமுக சார்பில் போட்டியிட்ட சாந்தாமணி, பாஜக சார்பில் போட்டியிட்ட வேட்பாளரும் தற்போது மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ஆகியோர் இன்று ஒரே மேடையில் உள்ளது பாஜக வளர்ச்சியை காட்டுகிறது.எனவும் கடந்த 9 ஆண்டுகளாக பாரதபிரதமர் நரேந்திரமோடி ஏழைகள் இருக்ககூடாது என எண்ணி ஆட்சி நடத்தி வருகின்றார். மத்தியரசு சார்பில் ஏழைகளுக்கு கான்கீரிட் வீடுகள், இலவச கழிப்பறைகள், வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் எருமைகள் வளர்ப்பு குறைந்து வருகிறது .அதற்கு மத்திய இணையமைச்சர் தனி திட்டத்தை கொண்டு வந்து விவசாயத்திற்கு உறுதுணையாக உள்ளார். மத்தியரசில் காங்கிரஸ் ஆட்சியிலிருந்த போது தமிழகத்தில் 9 அமைச்சர்கள் இருந்தனர். அப்போது தமிழகத்திற்கு எந்த திட்டமும், நிதியும் கிடைக்க வில்லை. தற்போது தமிழகத்தில் ஒரே ஒரு அமைச்சர் எல்.முருகன் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளார். தமிழக கவர்னர் அலுவலகமான ராஜ்பவன் முன் பெட்ரோல் குண்டு வீசியவர் வெளியே வந்ததும் அவரை காவல்துறை கண்காணிக்கவில்லை. தமிழக அரசு காவல்துறையின் கைகளை அவிழ்த்துவிட வேண்டும். இதனால் சட்ட ஒழுங்கு சந்தி சிரித்து விட்டது என்றார். தமிழக முதல்வர் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளவாறு 99 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாக கூறியுள்ளார். அதில் 200 வதாக கூறியுள்ள வாக்குறுதிகளில் தமிழகத்தில் உள்ள பல்வேறு கனிமவளத்தை மேம்படுத்தவும், அரசுக்கு உரிய வருமானம் ஈட்டவும் தனி கனிமளவத்துறை சுரங்க அமைச்சகம் நிறைவேற்றப்படும் என கூறியுள்ளனர். மேலும் திமுக தேர்தல் வாக்குறுதில் சங்ககிரியில் ஆட்டோ நகரம் உருவாக்கப்படும் என்று கூறியுள்ளனர். அதனை நிறைவேற்றவில்லை. சங்ககிரியில் ஏராளமான லாரிகள் இயக்கப்படுகிறது. சங்ககிரியில் ஆட்டோ நகரம் ஆரம்பிப்பதற்கு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் தேர்தல் வாக்குறுதியில் பெட்ரோல், டீசல், குறைப்பதாக கூறியுள்ளதை நிறைவேற்றவில்லை. தற்போது தமிழக அரசு லாரிகளுக்கான வரிகள் உயர்த்தப்பட்டுள்ளது. எனவும் சங்ககிரியிலும் மண் வள கொள்ளை நடந்துள்ளது. தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை நீக்கிவிட்டு கனிமவளத்துறை அமைச்சகத்தை உருவாக்க வேண்டும். சங்ககிரியில் உள்ள பழைமைவாய்ந்த கோட்டையில் தீரன்சின்னமலை தூக்கிலிடப்பட்டுள்ளார். சங்ககிரி மலையை சுற்றுலாதலமாக்காமல் அரசின் திட்டத்திற்கு பெரியார், அண்ணா, கருணாநிதி பெயர்களை வைக்கின்றனர். சங்ககிரி மலை உச்சியில் உள்ள சென்னகேவசப்பெருமாள், அடிவாரத்தில் உள்ள வரதராஜப்பெருமாள், வி.என்.பாளையத்தில் உள்ள வஸந்தவல்லபராஜபெருமாள் கோயில்களில் நூறு ஆண்டுகளுக்கு மேலாக குடமுழுக்கு விழா நடைபெறவில்லை. இந்து சமய அறநிலையத்துறை தொல்லியல்துறையிடம் அனுமதி பெற வேண்டும் என்று பொய் கூறுகின்றனர். தமிழகத்தில் உள்ளஇந்து சமயஅறநிலையத்துறை தொல்லியத்துறை எழுதினால் மத்தியஇணையமைச்சர் ஒரு வாரத்தில் அனுமதி பெற்று தருவார். தமிழக முதல்வர் பாரதபிரதமர் ஏதுவும் செய்யவில்லை என்று கூறுகிறார். சேலம் மாவட்டத்தில் மட்டும் அதிகளவிலான திட்டங்களை மத்தியரசு செய்துள்ளது. எனவே பொதுமக்கள் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவிற்கு தாமரை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் எனவும் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் 400 இடங்களில் வென்று பாஜக ஆட்சி அமைக்கும் என்றும் பேசினார்.அப்போது மத்திய இணையமைச்சர் எல்.முருகன், மாநிலத்துணைத்தலைவர்கள் கே.பி.ராமலிங்கம், வி.பி.துரைசாமி, சேலம் மேற்கு மாவட்டத்தலைவர் சுதிர்முருகன் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.



Tags

Next Story