வட்டாரப் போக்குவரத்து துறை ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்ட அறிவிப்பு

வட்டாரப் போக்குவரத்து துறை ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்ட அறிவிப்பு

பாலசுப்பிரமணியன் 

பதவி உயர்வு, காலி பணியிடங்களை நிரப்பக் கோரி உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வட்டாரப் போக்குவரத்து துறை ஊழியர்கள் 30-ம் தேதி காலவரையற்ற வேலை நிறுத்த‌ போராட்டத்தில் ஈடுபட போவதாக போக்குவரத்து துறை ஊழியர் சங்கத்தின் சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் ஜெயங்கொண்டத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தமிழ்நாடு போக்குவரத்து துறை சிறப்பு தலைவர் கு. பாலசுப்பிரமணியன் ஜெயங்கொண்டத்தில் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் :- தமிழக அரசின் போக்குவரத்து துறை நிர்வாகத்தில் தொழில்நுட்ப பணியாளர்கள் அமைச்சுப் பணியாளர்கள் என இரண்டு பிரிவு பணியாளர்கள் பணியாற்றிய வருகிறார்கள். இந்த இரண்டு பிரிவு பணியாளர்களுக்கு இடையில் பிரச்சனைகள் ஏற்பட்டு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த சந்தர்ப்பத்தில், ஆர்டிஓ பணியிடம் முதல் டெப்டி டிரான்ஸ்போர்ட் ஸ்போர்ட்ஸ் கமிஷனர், ஜாயின் ட்ரான்ஸ்போர்ட் கமிஷனர், ட்ரான்ஸ்போர்ட் கமிஷனர் இந்த பணியிடங்கள் அனைத்தும் நிர்வாகப் பணியிடங்களாகும்.

இந்த நிர்வாக பணியிடங்களில் தொழில்நுட்ப அதிகாரிகள் இருப்பதால் துறைகளுக்கு கெட்ட பெயர் வந்து கொண்டே இருக்கிறது. குறிப்பாக மனித தலையீடு இல்லாமல் மெஷின்கள் மூலமாக நேர்மையான உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என மத்திய அரசாங்கம் சொல்லியிருக்கிறது. அதில் குறிப்பாக ஓட்டுநர்களுக்கு எவ்வாறு லைசன்ஸ் கொடுக்க வேண்டும், பயிற்சி நிலையம் உருவாக்கப்பட வேண்டும், அதேபோல வாகனங்களுக்கு தகுதி சான்று வழங்குவதற்கு தனியான மெஷின்கள் உருவாக்கப்பட்டுள்ளன அதன் மூலமாக தகுதி சான்றுகள் வழங்கப்பட வேண்டும்,

அதேபோல புதிய வாகனங்கள் பதிவு செய்வதற்கு வாகனங்களைக் கொண்டு வராமல் டீலர்கள் பதிவு செய்யலாம் என்ற நடைமுறையும் மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்த மூன்று நடைமுறைகளையும் நடைமுறைப்படுத்தாமல் தொழில்நுட்ப அதிகாரிகள் அமைச்சு பணி பிரிவிணர்களிடையே பதவி உயர்வுகளையும் சேர்த்து பறிப்பதற்கு முயற்சி செய்கிறார்கள். குறிப்பாக மாண்புமிகு மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்கள் ஆர்டிஓ பணியிடங்கள், நிர்வாக பணியிடங்களில் ஐந்தில் ஒரு பங்கு பணி அமைச்சு பணி பிரிவினர்களுக்கு வழங்கியிருந்தார். அவர் வழங்கிய பணியிடங்களை தொழில்நுட்ப அதிகாரிகள் பறிப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். அதேபோன்று சோதனைச் சாவடிகளில் டெக்னிக்கல் படித்தவர்களுடைய பணிகள் எதுவும் இல்லை.

அந்தப் பணிகளில் இருந்து அமைச்சர் பணி பிரிவினர்களை அகற்றுவதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். அதேபோன்று வாகனங்களுடைய இதர பணிகளில் எங்கெல்லாம் தொழில்நுட்பம் தேவையில்லை அங்கெல்லாம் அமைத்து பணியாளர்களுக்கு பதவி உயர்வு வாய்ப்புகள் இருக்கின்றன. இவற்றையெல்லாம் டாக்டர் கலைஞர் அவர்கள் வழங்கினார். அந்தப் பணிகள் எல்லாம் பதவிகள் எல்லாம் அதிகாரங்கள் எல்லாம் தொழில்நுட்ப அதிகாரிகள் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு இருக்கிறார்கள். இதை எதிர்த்து கடந்த 17ஆம் தேதி கருப்பு சட்டையை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினோம். நேற்றைய தினம் மாநிலம் முழுவதும் 90 சதவீத பணியாளர்கள் ஒரு நாள் சிறு விடுப்பு போராட்டம் நடைபெற்றது. இதற்குப் பிறகு 30_04_2024 முதல் மாநிலம் முழுவதும் அனைத்து வட்டாரப் போக்குவரத்து துறை பணியாளர்களும் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளார்கள். இந்த விஷயத்தில் தமிழக முதல்வர் தலையிட்டு பதவி உயர்வு பணியிடங்களையும், அமைச்சுபணி பணியிடங்களிடமிருந்து பறிப்பதை தடுத்து நிறுத்தும் படி கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags

Next Story