ஷார்ஜாவில் கோவை அமீர் அல்தாப் எழுதிய நூல் வெளியீட்டு விழா

ஷார்ஜாவில் கோவை அமீர் அல்தாப் எழுதிய நூல் வெளியீட்டு விழா

நூல் வெளியிட்டு விழா


ஷார்ஜாவில் கோவை அமீர் அல்தாப் எழுதிய நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

ஷார்ஜா ஐ.டி.எம். சர்வதேச பல்கலைக்கழக அரங்கில் இஸ்லாமிய இலக்கியக் கழகம், அபுதாபி அய்மான் சங்கம் மற்றும் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்கம் ஆகியவை இணைந்து கோவை டாக்டர் அமீர் அல்தாப் எழுதிய குறளும், குர்ஆனும் கற்றுத்தரும் வாழ்வியல் உள்ளிட்ட நான்கு நூல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது.

ஜமால் முஹம்மது கல்லூரியின் ஓய்வு பெற்ற துணை முதல்வர் பேரா. முனைவர் பீ.மு.மன்சூர் தலைமை வகித்தார். அவர் தனது உரையில் குறளும், குர்ஆனும் கற்றுத்தரும் வாழ்வியல் குறித்து ஆய்வுரை நிகழ்த்தினார். மேலும் குறளின் கருத்துக்களையும், குர்ஆனின் கருத்தியலை ஒப்புநோக்கி இன்றைய சமூகத்துக்கு தேவையான வகையில் நூலை படைத்த ஆசிரியருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். அபுதாபி அய்மான் பைத்துல்மால் அமைப்பின் தலைவர் அதிரை சாகுல் ஹமீது ஹாஜியார் முன்னிலை வகித்தார்.

திண்டுக்கல் மாணவர்கள் ஹம்தான் மற்றும் அத்னான் ஆகியோர் இறைவசனங்களை ஓதினர். தஞ்சை மாணவர்கள் முகுந்தன் பாலன் மற்றும் மிர்துளா ஆகியோர் திருக்குறளை வாசித்தனர். இஸ்லாமிய இலக்கிய கழக அமீரக ஒருங்கிணைப்பாளர்கள் முஹிப்புல் உலமா ஏ. முஹம்மது மஃஹ்ஃரூப் தொடக்கவுரை மற்றும் முதுவை ஹிதாயத் வரவேற்புரை ஆற்றினர். ஏசு பிரானின் சத்தியத்தூது என்ற நூலின் ஆய்வுரையை திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க அமீரகப் பிரிவு பொதுச்செயலாளர் திண்டுக்கல் அல்ஹாஜ் ஜமால் முஹைதீன், துபாய் கர்டின் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி இயக்குநர் மற்றும் பொறியியல் துறை தலைவர் பேரா.முனைவர். சித்திரை பொன் செல்வன் விஞ்ஞானப் பேரற்புதங்களாய் கடல்களும், விலங்குகளும் என்ற நூல் குறித்த ஆய்வுரையும், கல்லிடைக்குறிச்சி முனைவர் ஆ. முகம்மது முகைதீன் விண்ணிலும், மண்ணிலும் மறைந்திருக்கும் ரகசியங்கள் என்ற நூல் குறித்த ஆய்வுரை நிகழ்த்தினர். நூலை முனைவர் பீ.மு.மன்சூர் வெளியிட முஹிப்புல் உலமா ஏ. முஹம்மது மஃஹ்ரூப் மற்றும் பிரமுகர்கள் பெற்றுக் கொண்டனர்.

அமீரக இந்திய நல்வாழ்வு பேரவையின் துணைத்தலைவர் பரமக்குடி ஏ.எஸ். இப்ராஹிம், துபாய் மண்டல செயலாளர் வி. களத்தூர் உமர் ஃபாரூக், ஃபார்ம் பாஸ்கெட் உரிமையாளர் வலசை பைசல், இலக்கிய ஆர்வலர் சான்யோ, அபுதாபி அய்மான் சங்க நிர்வாக செயலாளர் ஆடுதுறை முஹைதீன் அப்துல் காதர், ஆடிட்டர் ஜலால், புதுக்கோட்டை காதர் ஹுசைன், தஞ்சை மன்னர் மன்னன், கட்டுமாவடி பைசல் ரஹ்மான், மணமேல்குடி அம்ஜத் கான் உள்ளிட்ட பலர் வாழ்த்துரை நிகழ்த்தினர்.

பன்னூலாசிரியர் கோவை டாக்டர் அமீர் அல்தாப் ஏற்புரை நிகழ்த்தினார். அமீரகத்தில் மிகவும் பிரமாண்ட வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சி மனதை நெகிழச் செய்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு வந்து சிறப்பித்த அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். அபுதாபி அய்மான் சங்க பொதுச் செயலாளர் லால்பேட்டை மௌலவி முஹம்மது அப்பாஸ் நன்றி கூறினார்.

Tags

Read MoreRead Less
Next Story