மார்க்கெட்டில் வியாபாரியை அரிவாளால் தாக்கிய சிறுவன் கைது

மார்க்கெட்டில் வியாபாரியை அரிவாளால் தாக்கிய சிறுவன் கைது

போக்சோ வழக்கில் கைது

தூத்துக்குடி வ.உ.சி. மார்க்கெட்டில் வியாபாரியை அரிவாளால் தாக்கிய சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி சண்முகபுரத்தை சேர்ந்தவர் திசைக்கரை ராஜா (45). வியாபாரி. இவர் தூத்துக்குடி வ.உ.சி. மார்க்கெட்டில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவரது கடைக்கு அருகே உள்ள கடையில் பொருட்கள் வாங்குவதற்காக 4 மர்ம நபர்கள் வந்து உள்ளனர்.

அப்போது, அந்த கடையில் ஆள் இல்லாததால், 4 பேரும் கடைக்குள் சென்று பொருட்களை எடுத்து உள்ளனர். இதனை பார்த்த திசைக்கரை ராஜா, கடையில் ஆள் இல்லாத போது, எதற்காக கடைக்குள் சென்று பொருட்களை எடுக்கிறீர்கள் என்று சத்தம் போட்டு உள்ளார்.

இதனால் அவருக்கும், மர்ம நபர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த மர்ம நபர்கள் மறைத்து வைத்து இருந்த அரிவாளை திரும்பி பிடித்து, திசைக்கரை ராஜாவின் தலையில் தாக்கி விட்டு தப்பி சென்று விட்டார்களாம்.

இதில் காயம் அடைந்த திசைக்கரை ராஜா தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில் மத்தியபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அலெக்ஸ் ராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில், சிறுவன் உள்ளிட்ட 4 பேர் வியாபாரியை தாக்கியது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் சிறுவனை மடக்கி பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் தப்பி ஓடிய 3 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர். வ.உ.சி. மார்க்கெட்டில் வியாபாரி தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும் என்றும் வியாபாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

Tags

Next Story