சிதம்பரம் நடராஜர் கோவிலில் பிரம்மோற்சவம்

சிதம்பரம் நடராஜர் கோவிலில் பிரம்மோற்சவம்

சிதம்பரம் நடராஜர் கோவில் பிரம்மோற்சவம் நடத்துவதை தொடர்ச்சியாக தடுத்து வருவதாக செயல் அறங்காவலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில்மனு அளித்துள்ளார்.


சிதம்பரம் நடராஜர் கோவில் பிரம்மோற்சவம் நடத்துவதை தொடர்ச்சியாக தடுத்து வருவதாக செயல் அறங்காவலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில்மனு அளித்துள்ளார்.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள கோவிந்தராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் நடத்துவதை பொது தீட்சிதர்கள் குழு தொடர்ச்சியாக தடுத்து வருகின்றனர் என்று சிதம்பரம் கோவிந்தராஜ பெருமாள் கோவில் செயல் அறங்காவலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில்மனு அளித்துள்ளார். சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குள் அமைந்துள்ள கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம் நடத்த எதிர்ப்பு தெரிவித்த வழக்கு மே 10 ஆம் தேதியில் சிறப்பு அமர்வு முன் விசாரணை செய்யப்பட உள்ளது. வரும் 25 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம் நடத்த எதிர்ப்பு தெரிவித்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோவிந்தராஜ பெருமாள் கோவில் செயல் அறங்காவலர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story