அருணாச்சலேஸ்வரர் கோயிலில் குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டும் அறை

அருணாச்சலேஸ்வரர் கோயிலில் குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டும் அறை

தாய்பாலூட்டும் அறை


திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலுக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வந்து செல்கின்றனர். இங்கு சாமி தரிசனம் செய்ய வரும் தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்கள் தங்களது குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டுவதற்கு பொது இடங்களில் அமர்ந்து தாய்ப்பால் கொடுக்கின்றனர்.

இதனை கருத்தில் கொண்டு திருவண்ணாமலை இன்னர் வீல் கிளப் சார்பில் ஒரு லட்சமரூபாய் மதிப்பீட்டில் தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்களுக்கு தனி அறை அமைத்து அதன் திறப்புவிழா நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு இன்னர்வில் கிளப் தலைவர் சரண்யா தினேஷ் தலைமை தாங்கினார். செயலாளர் பாரதி அனைவரையும் வரவேற்றார்.

அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் அறங்காவலர் குழு தலைவர் இரா. ஜீவானந்தம், கோயில் இணை ஆணையர் சி. ஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் பா. முருகேஷ் அவர்கள் தாய் பாலூட்டும் அறையினை திறந்து வைத்தார்.

Tags

Read MoreRead Less
Next Story