மதுரை சிறையில் அடம் பிடிக்கும் லஞ்ச அமலாக்கத்துறை அதிகாரி
அங்கித்திவாரி
திண்டுக்கல் அரசு டாக்டர் சுரேஷ்பாபுவின் சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக ரூ.20 லட்சம் லஞ்சம் பெற்றதாக டிச.,1ல் லஞ்சஒழிப்பு போலீசாரால் மதுரை மண்டல அமலாக்கத்துறை அதிகாரி அங்கித்திவாரி கைது செய்யப்பட்டார். அன்றிரவே திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார். மறுநாள் மதுரை சிறைக்கு மாற்றப்பட்டார். மனஅழுத்தத்தில் இருந்த அவருக்கு கவுன்சிலிங் கொடுக்கப்பட்டது.தற்போது ரிமாண்ட் செல் 2ல் உள்ளார். தான் வருமானவரி செலுத்தக் கூடிய நபர் என்பதால் முதல் வகுப்பு அறை வேண்டும் என அடம் பிடித்து வருகிறார். நீதிமன்ற அனுமதி பெற்றால் தரத் தயார் என சிறை நிர்வாகம் கூறி வருகிறது. இதற்கிடையே கைதிகள் வாரம் ஒருமுறை 9 நிமிடங்கள் டெலிபோன் மூலம் குடும்பத்தினரிடம் பேச அனுமதி வழங்கப்படுகிறது. அதை பயன்படுத்தி அங்கித்திவாரி தனது குடும்பத்தினரிடம் பேசியுள்ளார். அதை தொடர்ந்து அவர்கள் சிறைக்கு வந்து ஆறுதல் கூறி சென்றுள்ளனர்.