அன்று செங்கல்... இன்று முட்டை... மத்திய அரசை வறுத்தெடுத்த உதயநிதி ஸ்டாலின்!

அன்று செங்கல்... இன்று முட்டை... மத்திய அரசை வறுத்தெடுத்த உதயநிதி ஸ்டாலின்!

உதயநிதி ஸ்டாலின்!

நீட் பிஜி தேர்வில் பூஜ்ஜியம் பெர்செண்டேஜ் எடுத்தாலும் மருத்துவப்படிபில் சேரலாம் என்று மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில், கோழி முட்டையை காண்பித்து நீட் தேர்வு விலக்கு கையெழுத்து இயக்கத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மத்திய அரசை விமர்சித்துள்ளார்.

நீட் தேர்வு ரத்து தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னெடுப்பில் ‘நீட் விலக்கு நம் இலக்கு’ என்ற பெயரில் கையெழுத்து இயக்கத்தை மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது;-

" நீட் தேர்வு குறித்த தமிழ்நாடு அரசின் மனதை புரிந்துகொள்ள ஒன்றிய அரசு மறுக்கிறது. நீட் விலக்கு மசோதா 21 மாதங்களாக குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக காத்துக் கிடக்கிறது. தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியாவின் பல மாநிலங்களில் நீட் தற்கொலைகள் தொடர்கிறது. நீட் வந்தால் தரமான மருத்துவர்கள் வருவார்கள். மருத்துவப் படிப்புக்கு பணம் தேவையில்லை என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால், தற்போது நீட் முதுநிலை படிப்பு தகுதித்தேர்வில் 'முட்டை' மதிப்பெண்கள் எடுத்தாலே போதும் என்கிறார்கள்.

திமுக நடத்தும் இந்த நீட் விலக்கு கையெழுத்து இயக்கத்தை நாம் மாபெரும் மக்கள் இயக்கமாக மாற்றி அதன் மூலம் நீட் தேர்வை ஒழித்தாக வேண்டும்

தமிழகத்தின் கல்வி உரிமையை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. நம் கல்வி உரிமையை சிதைக்க அனுமதிக்க மாட்டோம் என்பதற்கு அடையாளம்தான் இந்த கையெழுத்து இயக்கம். நீட் ஒழிப்பிற்காக பெறப்படும் இந்த கையெழுத்துக்கள் அனைத்தும் டிசம்பரில் நடைபெறும் இளைஞரணி மாநாட்டில் முதல்வரிடம் ஒப்படைக்கப்பட்டு, குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்படும்” என்று தெரிவித்தார்.

Tags

Next Story