வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் நகை கொள்ளை
கொள்ளை நடந்த வீடு
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை புனித அலங்கார அன்னை தேவாலயத்தின் பின்னாள் உள்ள பாரதி நகரை சேர்ந்தவர்கள் சந்தானகிருஷ்ணன், பரிமளா தம்பதியர். சந்தான கிருஷ்ணன் தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராகவும், மனைவி பரிமளா சிவகங்கை அரசு கலைக்கல்லூரியில் கெளரவ விரிவுரையாளராகவும் பணிபுரிந்து வருகிறார்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அருகில் உள்ள காளவாசல் பகுதியில் பரிமளாவின் தந்தை கமலக்கண்ணன் வயது மூப்பு காரணமாக உயிரிழந்த நிலையில் பரிமளா தனது தந்தை வீட்டிற்கு அடிக்கடி சென்றுவந்துள்ளார். நேற்று தனது வீட்டை பூட்டிவிட்டு தந்தை வீட்டிற்கு சென்றவர். இன்று காலை தனது வீட்டிற்கு திரும்பியபோது கதவுகள் திறக்கப்பட்டும் பீரோக்கள் திறக்கப்பட்டும் பொருட்கள் சிதறியும் காணப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்து உடனடியாக சிவகங்கை நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தடயங்களை சேகரித்து விசாரனை மேற்கொண்டதில் பீரோவில் இருந்த 25 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவரவே அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை கொண்டு குற்றவாளிகளை தேடிவருகின்றனர்.