உடைந்த பிளாஸ்டிகா? இப்படியும் பயன்படுத்தலாம் !

உடைந்த பிளாஸ்டிகா? இப்படியும் பயன்படுத்தலாம் !

பிளாஸ்டிக் 

உடைந்த பிளாஸ்டிக் குடங்கள், பக்கெட்டுகள் ஆகியவற்றைப் பாதியாக வெட்டிக் குப்பைத் தொட்டியாகவும், பூ வைக்கும் தொட்டியாகவும் மாற்றிக் கொள்ளலாம்.

நாள்தோறும் சாம்பிராணிப்புகை போடுவது நல்லது. ஒட்டடை பிடிக்காது. கொசுக்கள் ஓடும். வேறு நச்சுப் பூச்சி, புழுக்களும் வீட்டை விட்டு வெளியேறும்.

அடுப்பில் ஏற்றும் பாத்திரத்தின் வெளி அடிப்புறத்தில் அரிசி மாவு, தவிடு, சாம்பல் போன்றவற்றில் ஏதாவது ஒன்றினைப் பூசி வைத்தால் அதில் கரி பிடிக்காது. கழுவினால் எளிதாக அகன்று விடும்.

அலுமினியப் பாத்திரங்களில் உப்பு, புளி இவைகள் கலந்த பொருட்களை வைத் திருக்கக் கூடாது. உப்பிலும், புளியிலும் அலுமினியம் கரையும்.

அலுமினியம், பித்தளை, பீங்கான் பாத்திரங்ககளில் சிறிய ஓட்டைகள் விழுந்திருந்தால் சிறிது துணியை எரித்து சாம்பலாக்கி சுண்ணாம்பை குலைத்து ஓட்டை உள்ள இடங்களில் பூசி நன்றாக காய்ந்தவுடன் உபயோகிக்கவும்.

Tags

Next Story