''கழன்று ஓடும் பேருந்து வீல்.. உடைந்து விழும் படிக்கட்டுகள்..!'' லிஸ்ட் போட்ட இபிஎஸ்..!

கழன்று ஓடும் பேருந்து வீல்.. உடைந்து விழும் படிக்கட்டுகள்..! லிஸ்ட் போட்ட இபிஎஸ்..!

இபிஎஸ்

நாடாளுமன்ற தேர்தல் இன்னும் முடிவடையாத நிலையிலும் தேர்தல் முடிவுகள் கூட இன்னும் வெளி வராத நிலையில் சட்டமன்ற தேர்தலுக்கான அடுத்த கட்ட அடியெடுத்து வைத்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.

இந்த நாடாளுமன்ற தேர்தலின் முடிவுகள் அதிமுகவை மூன்றாவது இடத்திற்கு தள்ளிவிடும் என்ற அரசியல் விமர்சகர்களின் பேச்சுக்களுக்கிடையே எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து திமுக- வை குற்றம்சாட்டி வருகிறார்.

அந்த வகையில் தற்போது போக்குவரத்து கழகத்தை கையில் எடுத்துள்ளார். பேருந்து வீல்கள் கழன்று வருவதையும், படிகள் உடைந்து விழுவதையும் சுட்டிக்காட்டி பேசிய அவர், இந்தியா சுதந்திரம் பெற்ற பின்பும், மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகும், மக்களின் நன்மைக்காக செயல்படும் துறையாக, தமிழக அரசின் போக்குவரத்துக் கழகங்கள் இயங்கி வருகின்றன.

மற்ற மாநிலங்களில் பொதுப் போக்குவரத்து 70 சதவீதம் தனியார் வசமும், 30 சதவீதம் அரசு வசமும் இருக்கும் பட்சத்தில் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 80 சதவீதம் போக்குவரத்து வசதிகளை அரசு போக்குவரத்துக் கழகங்கள் தமிழக மக்களுக்கு வழங்கி வருகிறது.

30 ஆண்டுகால அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலங்களில், மக்களின் சேவைத் துறையாக, லாப நஷ்ட கணக்கு பாராமல் போக்குவரத்துத் துறை செயல்பட்டது. தேவைப்படும்போதெல்லாம் பழைய பேருந்துகள் மாற்றப்பட்டு, புதிய பேருந்துகள் இயக்கப்பட்டன. இதனால் மக்கள் சிரமமின்றி பயணம் மேற்கொண்டனர்.

அதிமுக அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் புதிய பேருந்துகள் வாங்கி தமிழக மக்கள் பாதுகாப்பான பயணங்கள் மேற்கொள்ள, பேருந்துகளின் ஆயுட் காலத்தை குறைந்த அளவு வருடங்களாக நிர்ணயித்தும், குறிப்பிட்ட கால இடைவெளியில் பழைய பேருந்துகளை ஏலம்விட்டு, அதற்கு பதில் புதிய பேருந்துகளை வாங்கி, தேவையான ஓட்டுநர்கள், நடத்துநர்கள், மெக்கானிக்குகள் மற்றும் இதர ஊழியர்களை நியமித்தும், பொது போக்குவரத்தை மக்களின் வசதிக்காக இயக்கியது. போக்குவரத்துக் கழகங்களின் நஷ்டத்தை அரசே ஈடு செய்தது.

ஆனால் தற்போது டயர் மற்றும் உதிரி பாகங்களை முறையாக கொள்முதல் செய்யாமல், பேருந்துகள் பழுது நீக்கப்படாமல், ஒட்டை-உடைசல் பஸ்கள் இயக்கப்பட்டு, இந்த அரசு மக்களின் உயிரோடு விளையாடி வருகிறது.

இதனை கண்காணித்து போக்குவத்து துறையில் உள்ள குளறுபடிகளை சரி செய்ய வேண்டும்.'' என திமுக அரசுக்கு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags

Next Story