மோடி சுட்ட வடை: திமுக நூதன பிரச்சாரம்!

மோடி சுட்ட வடை: திமுக நூதன பிரச்சாரம்!
X

பிரச்சாரம் 

பிரதமர் மோடி வாயிலேயே வடை சுடுவதாக கூறி, தூத்துக்குடியில் திமுகவினர் பொதுமக்களுக்கு வடை வழங்கி வினோதமான முறையில் பிரச்சாரம் மேற்கொண்டனர்.

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையம் நுழைவு வாயில் அருகே, திமுகவினர் பிரதமர் மோடி வாயிலேயே வடை சுடுவதாகவும், அறிவித்த எந்த திட்டங்களையும் செயல்படுத்தவில்லை என கூறியும் பொதுமக்களுக்கு வடை வழங்கி பிரசாரம் மேற்கொண்டனர்.

மோடி சுட்ட வடைகள் என சில திட்டங்களை காகிதத்தில் அச்சிட்டு அதில் வடையை வைத்து பொதுமக்களுக்கு வழங்கினர். இதில், திமுக வட்ட செயலாளர் கதிரேசன், மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் அபிராமிநாதன் ஆகியோர் தலைமையில் மாவட்டத் துணை ஒருங்கிணைப்பாளர்கள் அந்தோணி கண்ணன், பிரபு, நாகராஜன், அருணா தேவி ஆகியோர் முன்னிலையில் அண்ணா நகர் பகுதி செயலாளர் ரவீந்திரன், மாநகராட்சி கிழக்கு மண்டலத் தலைவர் கலைச்செல்வி, மகளிர் அணி கவிதா தேவி, மருத்துவரணி அருண்குமார், மாநகரப் பிரதிநிதி தயாள சுந்தர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story