அரசின் கொள்கை முடிவுகளில் தலையிட முடியாது - உயர்நீதிமன்ற மதுரை கிளை

அரசின் கொள்கை முடிவுகளில் தலையிட முடியாது - உயர்நீதிமன்ற மதுரை கிளை

 உயர்நீதிமன்ற மதுரை கிளை 

தமிழ்நாடு அரசின் கொள்கை ரீதியான முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ராமநாதபுரத்தை சேர்ந்த வழக்கறிஞர் முனியசாமி மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் வந்த முதலீட்டில் தென்மாவட்டங்களில் தொழிற்சாலைகள் அமைக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வழக்கு நேற்று உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை வாசித்த நீதிபதிகள்; தமிழ்நாடு அரசின் கொள்கை ரீதியான முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும், எங்கு தொழிற்சாலைகள் தொடங்க வேண்டும் என்பதை தமிழ்நாடு அரசுதான் முடிவு செய்ய முடியும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், இங்குதான் முதலீடு செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்க முடியாது எனக் கூறி உயர்நீதிமன்ற மதுரை கிளை மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

Tags

Next Story