வேலூரில் ஜலவலம் சென்ற 50 பேர் மீது வழக்கு

வேலூரில் ஜலவலம் சென்ற 50 பேர் மீது வழக்கு

காவல் நிலையம்

வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலில் ஜலவளம் சென்ற 50 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

வேலூர் கோட்டையில் ஜலகண்டேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோட்டையை சுற்றி அழகான அகழியும் உள்ளது. கடந்தமாதம் ஜலகண்டேஸ்வரர் கோவிலை சுற்றும் வகையில் கோட்டையை சுற்றி இந்து முன்னணியினர் மற்றும் பக்தர்கள் வலம் சென்றனர்.

இந்த நிகழ்ச்சி முதன்முறையாக ஜலவலம் என்ற பெயரில் நடத்தினர். தொடர்ந்து 2-வது மாதமாக பங்குனி மாத பவுர்ணமியையொட்டி நேற்று முன்தினம் (24.03.2024) ஜலவலம் சென்றனர். அப்போது கூட்டமாக அனுமதியின்றி செல்லக்கூடாது என்று போலீசார் அறிவுறுத்தினர். தொடர்ந்து இந்து முன்னணி சார்பில் பக்தர்கள் தனித்தனியே செல்வதாக தெரிவித்தனர். தொடர்ந்து பக்தர்களும் ஜலவலம் சென்றனர்.

இந்தநிலையில் வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் கிராம நிர்வாக அலுவலர் ( VAO) புகார் அளித்தார். அதில் அனுமதியின்றி ஜலவலம் சென்றதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்பேரில் இந்து முன்னணி கோட்ட தலைவர் மகேஷ், பொருளாளர் பாஸ்கர், அப்புபால்பாலாஜி உள்ளிட்ட 50 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story