பாஜக தலைவர் அண்ணாமலை மீதான வழக்கு - 2-ம் தேதி விசாரணை

பாஜக தலைவர் அண்ணாமலை மீதான வழக்கு -   2-ம் தேதி விசாரணை

அண்ணாமலை

சேலத்தை சேர்ந்தவர் பியூஸ் (வயது 47). சமூக ஆர்வலரான இவர், சேலம் 4-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் பா.ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடர்ந்தார். அதில், பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை, தமிழ்நாட்டு மக்களிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு தலைவர்கள் பற்றி தொடர்ந்து பொய்யான தகவலை பரப்பி வருகிறார். இதனால் மக்களிடம் கலவரம், மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவாகும். எனவே, அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், எனகூறியிருந்தார். இந்த மனுவை ஏற்றுக்கொண்ட மாஜிஸ்திரேட்டு யுவராஜ், வருகிற 2-ந் தேதி விசாரணை நடத்தப்படும் என்று கூறி வழக்கை தள்ளி வைத்தார்.

Tags

Next Story