மேம்பால முறைகேடு வழக்கை திரும்ப பெற்றதை எதிர்த்து வழக்கு.

மேம்பால முறைகேடு தொடர்பாக முதல்வர் ஸ்டாலின்,மற்றும் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக வழக்கு தொடர அனுமதியளித்ததை திரும்ப பெற்றதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மேம்பால முறைகேடு தொடர்பாக முதல்வர் ஸ்டாலின்,மற்றும் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக வழக்கு தொடர அனுமதியளித்ததை திரும்ப பெற்றதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது. உண்மைத்தன்மையை நிரூபிக்க ஏப்ரல் 25 ஆம் தேதிக்குள் ஒரு லட்சம் ரூபாய் டெபாசிட் செய்ய வழக்கு தொடர்ந்த கோவை தொழிலதிபர் மாணிக்கம் அத்தப்ப செட்டியாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

1996-2001 திமுக ஆட்சியில் சென்னையில் மேம்பாலங்கள் கட்டியதில் 115 கோடி முறைகேடு நடந்துள்ளதாக 2001 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, அப்போதைய மேயர் ஸ்டாலின், அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோருக்கு எதிராக குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு தொடர அனுமதியளித்து 2005 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு பின்னர் வந்த திமுக ஆட்சியில் கைவிடப்பட்டது. நீதித்துறை மீதான நம்பிக்கையை கேலிக்கூத்தாக்கும் வகையில், வழக்கு தொடர்வதற்கான அனுமதி திரும்பப் பெறப்பட்டுள்து என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story