பொங்கல் பரிசு தொகுப்பில் சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் வழங்க கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு!!
pongal parisu
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசு ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கி வருகிறது. கடந்த ஆண்டு பச்சரிசி, சர்க்கரை, கரும்பு, முந்திரி, உலர் திராட்சை, ஏலக்காய் அடங்கிய பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1000 ரொக்கப் பணம் வழங்கப்பட்டது. வருகிற பொங்கல் பண்டிகைக்கும் கடந்த ஆண்டை போல ரொக்க பணம் மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் விவசாயிகள் ரேஷன் கார்டுகளுக்கு வழங்கப்பட உள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பில், சர்க்கரைக்கு பதிலாக வெல்லத்தை சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். மேலும் தமிழக அரசு வெல்லத்தைச் சேர்க்க உத்தரவிடக்கோரி விவசாயிகள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கு வருகிற 19-ந்தேதி விசாரணைக்கு வருகிறது. மேலும் இடைத்தரகர்கள் பிரச்சனையை தவிர்க்க கொள்முதல் செய்யப்படும் வெல்லத்துக்கு உண்டான தொகையை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் விவசாயிகள் கூறியுள்ளனர்.