இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசிய வழக்கு: சேலம் கோர்ட்டில் சீமான் ஆஜர்

இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசிய வழக்கு: சேலம் கோர்ட்டில் சீமான் ஆஜர்

இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசிய வழக்கு தொடர்பாக சேலம் கோர்ட்டில் நாம் தமிழர் கட்சியின் ஒருகிணைப்பாளர் சீமான் ஆஜரானார்.

இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசிய வழக்கு தொடர்பாக சேலம் கோர்ட்டில் நாம் தமிழர் கட்சியின் ஒருகிணைப்பாளர் சீமான் ஆஜரானார்.

சேலம் அஸ்தம்பட்டி மணக்காட்டில் கடந்த 2017-ம் ஆண்டு நாம் தமிழர் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார். அப்போது, அவர் நெய்தல் படையை உருவாக்கி அதில் 15 ஆயிரம் இளைஞர்களுக்கு துப்பாக்கி சுடுதல், குண்டு எறிதல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் கொடுக்கப்படும், என்றார்.

இது இந்திய இறையாண்மைக்கு எதிராக பொதுமக்களை தூண்டிவிடுவதாக அஸ்தம்பட்டி போலீசில் அளித்த புகாரின்பேரில் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு சேலம் 3-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு நேற்று நீதிபதி ராமஜெயம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வக்கீலுடன் சீமான் நேரில் ஆஜரானார். இதையடுத்து இந்த வழக்கை வருகிற ஜூன் மாதம் 7-ந் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Tags

Next Story