விஜய் மீது காலணி விசிய விவகாரம்: காவல் நிலையத்தில் புகார்
காவல் நிலையத்தில் அளிக்கப்பட்டுள்ள புகார் மனு
விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்டத் தலைவர் அப்புனு என்பவர் சென்னை கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில், "விஜய் மக்கள் இய்க்கத்தின் தென் சென்னை மாவட்ட தலைவராக பொறுப்பு வகித்து வருகிறேன்.
கடந்த 28/12/ 2023. அன்று நடிகர் கேப்டன் விஜயகாந்த்தின் இறப்பிற்கு துக்கம் விசாரிப்பதற்காக இரவு சுமார் 10:30 மணி அளவில் நடிகர் விஜய் சென்னை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் திருமண மண்டபத்திற்கு வந்தார். அப்போது விஜய் அவர்களின் மீது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் காலணியை கழற்றி நோக்கி எரறிந்துள்ளார்.
இதனால் தமிழ்நாட்டில் உள்ள ஒட்டுமொத்த தளபதி விஜய் ரசிகர்கள், அவர்களின் சொந்தங்கள், மற்றும் அவர் மீது பாசத்தை வைத்துள்ள ஒட்டுமொத்த மக்களின் மனதை புண்படுத்தும் வகையிலும் அருவருக்கத்தக்க இம்மாதிரியான செயலில் ஈடுபட்ட, அந்த நபரை கண்டுபிடித்து அவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.