பாஜக சின்னத்தை மாற்ற வழக்கு - சீமான்

தேர்தல் முடிந்தவுடன் பாஜகவின் தாமரை சின்னம் கூடாது என்று வழக்கு தொடர்வேன். தேசிய மலர் எப்படி ஒரு கட்சியின் சின்னமாக இருக்க முடியும், ஒன்று தேசிய மலரை மாற்ற வேண்டும் அல்லது கட்சியின் சின்னத்தை மாற்ற வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

சென்னை வளசரவாக்கத்தில் உள்ள நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகத்தில் முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு பல ஆண்டுகள் சிறையில் இருந்து பின்னர் விடுதலை செய்யபட்ட சாந்தன் உடல்நல குறைவால் உயிரிழந்தார். அவருக்கு புகழ்வணக்க கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சாந்தன் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தொடர்ந்து, விவசாயி சின்னம் வேறு கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு, விவசாயி என்று பேர் வைத்தது நான் தான் சின்னத்துக்கு, சின்னம் ஒரு வலிமை தான் அதை கொண்டு சேர்த்தது நாங்கள் தான். நாடாளுமன்றத்தில் ஒரு அளவுக்கு வாக்கு பெற்றுள்ள கட்சிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று உள்ளது.

கட்சி சின்னத்திற்கு ஆறு மாதத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று உள்ளது, ஒருவர் சின்னம் கேட்டதும் அவசர அவசரமாக கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? விவசாயி சின்னம் விவகாரத்தில் உயர் நீதிமன்றம் செல்லும் கருத்தைப் பொறுத்துதான் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும். தேர்தல் முடிந்தவுடன் பாஜகவின் தாமரை சின்னம் கூடாது என்று வழக்கு தொடர்வேன் தேசிய மலர் எப்படி ஒரு கட்சியின் சின்னமாக இருக்க முடியும் ஒன்று தேசிய மலரை மாற்ற வேண்டும் அல்லது கட்சியின் சின்னத்தை மாற்ற வேண்டும் என்றார்.

Tags

Next Story